தூத்துக்குடி, ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இணையவழிக் கருத்தரங்கம்
தூத்துக்குடி, ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இணையவழிக் கருத்தரங்கம் "பொற்பனைக்கோட்டை அகழாய்வு (2021–2022) வெளிப்படுத்தும் வரலாற்று தடயங்கள்" என்ற தலைப்பில்.ஏ.பி.சி மகாலெட்சுமி மகளிர் கல்லூரி யின் வரலாற்றுத் துறையும், நிலம் – பன்னாட்டு இதழ் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மையம், மதுரையும் இணைந்து இணையவழியில் ஒருநாள் கருத்தரங்கம் நடைப்பெற்றது.
பொற்பனைக்கோட்டை அகழாய்வின் தொல்லியல் முக்கியத்துவம் மற்றும் தமிழ்நாட்டின் வரலாற்று, பண்பாட்டு மரபை அறிந்துகொள்வதில் அதன் பங்களிப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பங்கேற்பாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும்.
வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சி. செல்லப்பாண்டியன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் . தமிழ்நாட்டின் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்வதில் தொல்லியல் ஆய்வுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை, சமூக அறிவியல் பள்ளி, தொல்லியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இ. இனியன் அவர்கள் கருத்துரையாளராககலந்து கொண்டு, பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்லியல் சான்றுகள் மற்றும் அவற்றின் வரலாற்று, பண்பாட்டு முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.
இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளராக வரலாற்றுத் துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் முனைவர் லோ. சங்கீதா அவர்கள், வரலாற்று துறை உதவி பேராசிரியர்.முனைவர் சி. செல்லப்பாண்டியன், அவர்கள் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மையத் தலைவர் திருமதி எஸ். ஏ. ஜெயலட்சுமி, அவர்கள் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு நடைப்பெற்றது.
இக்கருத்தரங்கின் மூலம் பங்கேற்பாளர்கள் தொல்லியல் அகழாய்வுகள், வரலாற்றுச் சான்றுகள் மற்றும் பொற்பனைக்கோட்டையின் பண்பாட்டு முக்கியத்துவம் குறித்து பயனுள்ள அறிவைப் பெற்றனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் வரலாற்றுத் துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் முனைவர் லோ. சங்கீதா அவர் நன்றியுரை நல்கினார் .
அனைவரின் ஒத்துழைப்புடன் இக் கருத்தரங்கம் இனிதே நிறையுற்றது...
tamilanda