தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா. வரும் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்., பங்குத்தந்தை ஜான் செல்வம் பேட்டி.!

தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற ரோம் வாடிகன் சிட்டியால் பசிலிக்கா அந்தஸ்து பெற்ற ஆலயம் பணிமயமாதா பேராலயம்.. இந்த ஆலயத்தின் 444 வது ஆண்டு திருவிழா வரும் ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இதைத்தொடர்ந்து இன்று பனிமயமாதா பேராலய வளாகத்தில் பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை ஜான் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில்., வரும் 26 ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற அனைத்து மதத்தினரும் ஜாதி, மத வேறுபாடு இன்றி வழிபடக்கூடிய பனிமயமாதா பேராலய கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. 

ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு மக்களுக்காக சிறப்பு திருப்பலியும், 2ம் தேதி நற்கருணை பவனியும் நடைபெற உள்ளது.ஆகஸ்ட் 5ந் தேதி திருவிழா திருப்பலியும் மாதா சப்பரப்பவனியும் நடைபெற உள்ளது.திருவிழாவிற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்..

மேலும், 5ந் தேதி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் வரக்கூடிய ஆண்டில் பனிமய மாத பேராலயம் தேசிய பேராலயமாக மாறுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பேட்டி: ஜான் செல்வம், பங்குத்தந்தை.