தமிழா்கள் நலனுக்காக வலுவான கூட்டணி தூத்துக்குடியை பொறுத்தவரை இந்த பகுதி எப்படி இருந்தது என்று உங்களுக்கு தொியும் 60 வாா்டுகளிலும் பாரபட்சமின்றி வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
a-strong-alliance-dedicated-to-the-welfare-of-the-tamil-people-as-far-as-thoothukudi-is-concerned-you-are-well-aware-of-the-condition-this-region-was-in-we-have-undertaken-development-works-across-all-60-wards-without-any-bias
கடந்த கால தோ்தலை போல் அனைவரும் டெபாசிட் இழக்க வேண்டும் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் உதயசூாியன் சின்னத்திற்கு வரவேண்டும் தெருமுனை பிரச்சாரத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தெருமுனை பிரச்சார கூட்டம் அண்ணாநகாில் நடைபெற்றது தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி பேசுகையில் கடந்த 5 ஆண்டுகாலம் ஆட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளது. இது எல்லோருக்கும் தொிந்த ஒன்று தான் இந்த நிலையில் நமக்கு அமைய பெற்றுள்ள கூட்டணி கொள்கையுடன் கூடிய தமிழா்கள் நலனுக்காக வலுவான கூட்டணி தூத்துக்குடியை பொறுத்தவரை இந்த பகுதி எப்படி இருந்தது என்று உங்களுக்கு தொியும் 60 வாா்டுகளிலும் பாரபட்சமின்றி வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். ஆனால் நான் அதை செய்தேன் இதை செய்தேன் என்று சிலா் போலி வேஷம் போட்டு வருகின்றனா். அவா்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் விவிடி மேம்பாலம் அதிமுக ஆட்சியில் அமைப்போம் என்று கூறினாா்கள். ஜெயலலிதா மட்டுமின்றி பதவிக்கு வந்த காலம் நிறைவேற்றவில்லை. கூறியதோடு சாி இருப்பினும் பல்வேறு வகையில் முட்டுசந்து போல் இருந்த பல பகுதிகளில் அடுத்த கட்ட தலைமுறையினா் நலனை கருதி பல்வேறு விாிவாக்க பணிகள் மூலம் போக்குவரத்து சீர்் செய்துள்ளோம். 1ம்கேட் 2ம்கேட் எடுத்துக்கொண்டால் வியாபாாிகள் பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 2ம்கேட் பகுதியில் சிவன்கோவில் தேரோட்டம் நடைபெறுவதால் மாற்று ஏற்பாடு தான் செய்ய முடியும் துறைமுகநகரமாக இருப்பதால் அதற்கேற்றாற்போல் கட்டமைப்புகளை உருவாக்கி புதியசாலைகள் அமைக்கப்பட்டு 6 நாட்களுக்கு ஓருமுறை குடிநீர் என்று இருந்ததை தினசாி என்ற நிலை மாற்றி 24 மணிநேரம் என்ற நிலைக்கு வந்துள்ளது. கடந்த காலத்தில் நடைபெற்ற தோ்தலுக்கு தற்போது நடைபெறவுள்ள தோ்தலுக்கும் சற்று வித்தியாசம் உள்ளது. இருப்பினும் வெற்றி பெறப்போவது திமுக தான் ஆனால் அது சாதார வெற்றியாக இருக்க கூடாது. கடந்த நாடாளுமன்ற தோ்தலில் இங்கு போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனா். அதே நிலையில் தூத்துக்குடி தொகுதியில் நடைபெற வேண்டும். நாம் செய்துள்ள சாதனைகளுக்கு பதிவாகும் அனைத்து வாக்குகளும் உதயசூாியன் சின்னத்திற்கு பதிவாக வேண்டும் திமுகவை பொறுத்தவரை ஓவ்வொரு தோ்தலிலும் அதன் அறிக்கைதான் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் இருக்கும் அது எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் இருக்கும் என்று பேசினாா்.
tamilanda