இந்திய தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வரலாற்றுத் துறையும் இணைந்து நடத்திய கல்வெட்டுகளின் புகைப்பட கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்

இந்திய தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வரலாற்றுத் துறையும் இணைந்து நடத்திய கல்வெட்டுகளின் புகைப்பட கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்

தூத்துக்குடி

இந்திய தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வரலாற்றுத் துறையும் இணைந்து நடத்திய கல்வெட்டுகளின் புகைப்பட கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர் 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற இந்த கண்காட்சியில்வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகள், இந்து சமய காலத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கல்வெட்டுகள், இந்திய அளவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகள், தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் கல்வெட்டுகளின் தோற்றம், கிடைக்கப்பெற்ற இடம் குறித்த விளக்க குறிப்பும் அதில் இடம்பெற்று இருந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அருகில் உள்ள இடங்களில் கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகள், குறிப்பாக சிவகளை, ஆதிச்சநல்லூர் உள்ள பகுதியில் கிடைக்கப்பட்ட கல்வெட்டுகளும் அது குறித்த விளக்கமும் இடம்பெற்று இருந்தது. 

கண்காட்சியை பார்வையிட வந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வெட்டுகள் குறித்து விளக்கம் அளித்ததோடு கல்வெட்டுகளில் அவசியமும் கல்வெட்டை பாதுகாக்க வேண்டியது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கல்வெட்டு புகைப்பட கண்காட்சியில் கல்வெட்டின் மூலம் நமது நாட்டின் வளர்ச்சி எவ்வாறு கண்டறியப்படுகிறது என்பது குறித்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த புகைப்பட கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தூத்துக்குடியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்படக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.