தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மது பாட்டில்கள். பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை ஆக்கிரமிப்பு. மாநகராட்சி அறைகள் மூடப்பட்டுள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா…?

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மது பாட்டில்கள். பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை ஆக்கிரமிப்பு. மாநகராட்சி அறைகள் மூடப்பட்டுள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா…?

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மது பாட்டில்கள். பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை ஆக்கிரமிப்பு. மாநகராட்சி அறைகள் மூடப்பட்டுள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா…?

    தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசின் சாா்பில் இயக்கப்படும் பேருந்துகள் கோவில்பட்டி. மதுரை. சென்னை. பெங்களூர். ராமேஸ்வரம் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநில பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்திலிருந்து தான் செயல்பட்டு வருகிறது அதுபோல தனியாா் பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்குகிறது புதிய பேருந்து நிலையத்திலிருந்து தினசரி சாதாரண நாட்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர் விடுமுறை நாட்களில் கூடுதலாக பொதுமக்கள் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் சூழ்நிலை உள்ளது பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழ்நிலை தான் உள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்தும் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து தான் கடைகள் உள்ளது இதனால் பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை தான் நிலவி வருகிறது. அதுபோல மாநகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்டும் அறை பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளது இதனால் குழந்தைகளுக்கு பால் ஊட்டும் தாய்மார்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதுபோல பேருந்து நிலையத்துக்கு வரும் பொது மக்கள் மாநகராட்சி சார்பில் பொருட்கள் வைக்கும் அறை உள்ளது இந்த அறைக்கும் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக புற காவல் நிலையம் பேருந்து நிலையத்தில் உள்ளது இந்த புற காவல் நிலையம் செயல்படுவதே கிடையாது எப்போதும் மூடப்பட்டு தான் உள்ளது. மேலும் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையில் மது பாட்டில்கள் குவிந்து கிடக்கிறது மேலும் மது பிரியர்கள் பயன்படுத்திய மது அருந்துவதற்கான கிளாஸ் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை உள்ளிட்டவைகள் கழிப்பறையில் கிடக்கிறது இதனால் பொதுமக்கள் கழிப்பறைக்கு செல்வதற்கு சிரமப்படுகின்றனர். மொத்தத்தில் புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செயல்பட முடியாத பேருந்து நிலையமாகவே உள்ளது இதன் மீது மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் அதுபோல புதிய பேருந்து நிலையம் முழுவதும் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது ஆகையால் மாநகராட்சி ஆணையர் உடனடியாக பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பேருந்து நிலையத்தில் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் அதுபோல தாய்மார்கள் பாலூட்டும் அறை உடனடியாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பொருட்கள் வைக்கும் அறை உடனடியாக திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை யை மாநகராட்சி நிர்வாகத்திற்கு வைக்கின்றனர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா அல்லது ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் அதுபோல கழிப்பறை மது பிரியர்களின் மது கூடாரமாக உள்ளது அதனை கட்டுப்படுத்துமா மாநகராட்சி நிர்வாகம். அதுபோல புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன விற்பனை கூடம் ஒன்று உள்ளது அந்த விற்பனை கூடத்துக்கு உள்ள இருசக்கர வாகனங்கள் முழுவதும் பேருந்து நிலையத்தில் தான் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் எதிா்ப்பாா்க்கின்றனா்.