கோவில்பட்டியில் இருந்து கப்பிகுளம் கிராமத்திற்கு புதிய பேருந்து - கிராம மக்கள் வரவேற்பு*

கோவில்பட்டியில் இருந்து கப்பிகுளம் கிராமத்திற்கு புதிய பேருந்து - கிராம மக்கள் வரவேற்பு*

கோவில்பட்டியில் இருந்து கப்பிகுளம் கிராமத்திற்கு புதிய பேருந்து - கிராம மக்கள் வரவேற்பு

கோவில்பட்டி பணி மனையிலிருந்து பசுவந்தனை வழியாக கப்பிகுளம் கிராமத்திற்கு தடம் எண் 84 இரண்டு சுற்றுகள் இயக்கப்பட்டு வருகிறது

மேற்படி பேருந்து மேற்கூரை பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் இப் பேருந்திற்கு பதிலாக புதிய பேருந்து இயக்கப்பட வேண்டுமென அப்பகுதி கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் கோரிக்கை விடுத்தனர்

இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் புதிய பேருந்து சேவை துவக்கி வைக்கப்பட்டது.

இன்று கிராமத்திற்கு வந்த புதிய பேருந்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்கனி அரிச்சந்திரன் தலைமையில் ஒட்டுநர் மற்றும் நடத்துனருக்கு சால்வை அணிவித்து பேருந்திற்கு மாலை அணிவித்து கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் பெருமாள்சாமி, ஊர் பெரியவர்கள் கருப்பசாமி, ஜெயசிங், சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபு, தமிழக வெற்றி கழக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மனோஜ்குமார்,மின்சார வாரிய தொழிற்சங்கம் ராஜேஷ்குமார், இளைஞர் மன்ற நிர்வாகிகள் தமிழ்ராஜ், சதீஷ்குமார்,  விவேக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.