தூத்துக்குடியில் வாழ்க்கைக்காக ஓடுவோம் போதை பொருளுக்கு எதிராக ஓடுவோம் என்ற விழிப்புணர்வு மையக்கருத்தை முன்னிறுத்தி மராத்தான் போட்டி நடந்தது.
தூத்துக்குடியில் வாழ்க்கைக்காக ஓடுவோம் போதை பொருளுக்கு எதிராக ஓடுவோம் என்ற விழிப்புணர்வு மையக்கருத்தை முன்னிறுத்தி மராத்தான் போட்டி நடந்தது. இந்தப் போட்டியை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாக துணைத் தலைவர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். முன்னதாக கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகடாமி நிறுவன தலைவர் ரைபின் தார்ச்சியூஸ் வரவேற்றார் நிகழ்வில் சிருஷ்டி என்டர்பிரைசஸ் நிறுவனர் பெர்தினால் தார்ச்சியூஸ், கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவன இயக்குனர் விஸ்வ பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்பகா கெமிக்கல் நிறுவன இயக்குனர் கணேசன், அர்ச்சனா எஸ் ஆர் ஆர் ஏ மருத்துவமனை டாக்டர் நவீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதலிடம் பிடித்தவருக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது. தூத்துக்குடி கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, வ உ சி துறைமுகம், கல்பகா கெமிக்கல், சிருஷ்டி என்டர்பிரைசஸ், எஸ். தார்சியூஸ் இன்ஜினியரிங், நிலா சீ ஃபுட்ஸ், எஸ் ஆர் ஆர் ஏ மருத்துவமனை, தமிழ்நாடு ஆர்த்தோ அசோசியேசன், ஸ்ரீராம் இன்ஜினியரிங் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து 8 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரம், 15 வயது முதல் 60 வயது வரை உள்ள நபர்களுக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரம், 18 வயது முதல் 60 வயது வரை உள்ள நபர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரம், என்று மாராத்தான் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற நபர்களுக்கு டீ சர்ட், பதக்கம்,சான்றிதழ், டைமிங் சிப், உணவு போன்றவை வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் ரூபாய் 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விகாசா மேல்நிலைப்பள்ளி கிங் ஆப் கிங்ஸ் பள்ளி காமராஜர் கல்லூரி ஏ பி சி மகாலட்சுமி கல்லூரி காயல்பட்டினம் இஸ்லாமிய கல்லூரி போன்ற மாணவர்கள் பங்கேற்றார்கள்
tamilanda