நாசரேத்தில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி

நாசரேத்தில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி

நாசரேத்தில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

நாசரேத் காவல்நிலையமும் சமாரியன் பிட்னெஸ் ஜிம்மும் இணைந்து போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மெஞ்ஞானபுரம் காவல்ஆய்வாளர் இசக்கிதுரை அவர்கள் தலைமை வகித்து கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார்.போட்டி சீரணி கலையரங்கத்தில் இருந்து தொடங்கி மர்காசிஸ் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது. சுமார் 80 பேர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். ராமஜெயம் முதலிடத்தையும் லாசர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி அவர்கள் ரொக்கப்பரிசினை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுளை சமாரியன் பிட்னெஸ் ஜிம் உரிமையாளர் டாக்டர் விஜய் ஆனந்த் மற்றும் உறுப்பினர்கள் ராமச்சந்திரன், அரவிந்த், செல்வா, சஞ்சய் ஆகியோர் செய்திருந்தனர்.