பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் கடும் கண்டனம்

geetha-jeevan—the-dmk-secretary-for-the-northern-district-and-minister-for-social-welfare-and-womens-rights—has-strongly-condemned-former-aiadmk-minister-cv-shanmugam-for-making-derogatory-remarks-against-women

பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் கடும் கண்டனம்

அரசியல் நாகரிகம் இல்லாமல் பெண்களை இழிவுபடுத்தும் அதிமுக அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்

 தூத்துக்குடி                                               பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் கடும் கண்டனம் தெரிவித்து வௌிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ இல்லாமல் பெண்களை இழிவுபடுத்துவதையே முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம் எம்.பி வாடிக்கையாகக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒரு பொருளாக ஒப்பிட்டு அருவருக்கத்தக்க கருத்தை வெளியிட்ட அவர், தற்போது மீண்டும் பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார். இது பெண்களைப் பற்றிய அதிமுகவின் இழிவான மனநிலையை வெளிப்படுத்துகிறது.

     முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் "திராவிட மாடல்" ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் எனப் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பெண்களின் உயர்கல்வி 52 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.

    பெண்களின் முன்னேற்றத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் அதிமுகவினர் பெண்களைத் தரக்குறைவாகப் பேசி வருகிறார்கள். ஓர் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், ஒரு மனிதராக இருப்பதற்குக் கூட சி.வி. சண்முகம் தகுதியற்றவர். பெண்களை இழிவுபடுத்தி வரும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.