தூத்துக்குடி பள்ளி மாணவிகள் கபாடி போட்டியில் மாநில அளவில் சாதனை
thoothukudi-school-girls-set-state-level-record-in-kabaddi-competition
தூத்துக்குடி பள்ளி மாணவிகள் கபாடி போட்டியில் மாநில அளவில் சாதனை
தூத்துக்குடி தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக ஐந்தாவது மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் 14 வயதிற்க்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான சாம்பியன்ஷிப் கபாடியில் தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை பெற்று பள்ளிக்கும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரலாற்றில் 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் முதன்முதலாக மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து வரலாற்று சாதனை புரிந்துள்ளார்கள். பள்ளி மாணவிகளுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியை சில்வா பெர்னாந்த், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன், பள்ளி மாணவிகள் ஆகியோரை பள்ளித் தாளாளர் பெர்னதெத் மேரி, பள்ளித் தலைமை ஆசிரியை சகாய ஹேமலதா ஜெயந்தி, பள்ளி ஆசிரியைகள் அலுவலக பணியாளர்கள் அனைவரும் மனதார பாராட்டினார்கள்.
அன்னை இந்திரா காந்தி இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேரா மெடிக்கல் சயின்ஸ் நிர்வாக இயக்குனர் கீதாகுப்புசாமி, தாரணி பவுண்டேஷன் சேர்மன் போஜராஜன், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி, தாரணி இன்சூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஸ்ரீனிவாசன், ராமநாதன், மகேஸ்வரி போஜராஜன் ஆகியோா் வெற்றி பெற்ற வீராங்கனைகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியையும் பள்ளி நிர்வாகத்தையும் மாநில அளவில் தங்கம் பெற வாழ்த்து தெரிவித்தார்கள். சிறப்பு பயிற்சி அளித்த கபாடி கந்தன் மற்றும் சுபாக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
tamilanda