வளர்ந்து நிமிர்ந்த இந்தியா" என்ற தலைப்பில், நெல்லை எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

வளர்ந்து நிமிர்ந்த இந்தியா" என்ற தலைப்பில், நெல்லை எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தூத்துக்குடி: வளர்ந்து நிமிர்ந்த இந்தியா" என்ற தலைப்பில், நெல்லை எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில், பள்ளி மாணவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், எலும்புகளின் வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் வழக்கறிஞர் சுவர்ணலதா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் மாரியப்பன் வரவேற்புரை வழங்கினார். தமிழன்டா இயக்கம் மற்றும் கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் முன்னிலை வகித்தார்.

மருத்துவர்கள் டாக்டர் மாரிமுத்து (லட்சுமி பாலி கிளினிக்) மற்றும் டாக்டர் பாலக்கண்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு சத்தான உணவின் அவசியம், எலும்புகள் வலிமையாக வளர தேவையான ஊட்டச்சத்துகள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டாக்டர் மாரிமுத்து தலைமையில், மாணவர்களின் உடல் மற்றும் எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் உணவுமுறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், 174 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க கல்வி நிறுவனமாக எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.