நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி) தாளூர்-கல்லூரி வளாகத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகச் செயற்குழுக் கூட்டம்
பெற்றோர் ஆசிரியர் கழகச் செயற்குழுக் கூட்டம்
நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி) தாளூர்-கல்லூரி வளாகத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகச் செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கல்லூரி இயக்குநர்/தாளாளர் முனைவர்.ராஸித் காஸாலி, கல்லூரியின் முதல்வர் முனைவர், பாலசண்முகதேவி, துணை முதல்வர்.
முனைவர், ரஞ்சித். துணைதலைவர் பேராசிரியர். மோகன் பாபு, கல்லூரி வளாக மேலாளர், உமர். முன்னாள் பெற்றோர் குழு தலைவர் திரு. சுதர்சன்.கல்லூரி புலன் முதன்மையாளர்கள் உட்பட கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
செயற்குழு கூட்டத்தில் கல்லூரி முதல்வர் வரவேற்புரை வழங்கினார். பின்னர் கல்லூரியின் தாளாளர்/இயக்குநர்., முனைவர் ராஸித் காஸாலி அவர்கள் மாணவர்களின் கல்வி முன்னேற்றம், வருகைப்பதிவு, ஒழுக்கம், தேர்வு முடிவுகள் மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். தொடர்ந்து துறை ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் கல்வித் திறன், வகுப்பறை செயல்பாடு மற்றும் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து பெற்றோருடன் கலந்துரையாடினர்.
பெற்றோர்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டனர். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. மாணவர்களின் ஒழுக்கம், தொழில்நுட்பத் திறன், போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மற்றும் இக்கூட்டத்தில் 2026-27 கல்வி ஆண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் கழகச் செயற்குழுவிற்கான தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 35 உறுப்பினர்கள் அடங்கிய குழுவாக உருவாக்கப்பட்டு இந்த குழுவே இவ்வாண்டு முழுவதும் சிறப்பாக செயல்படவுள்ளது.
இறுதியாக, பெற்றோர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு நன்றியைத் தெரிவித்தனர். அனைவரின் ஒத்துழைப்புடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
tamilanda