தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முழு வெளிப்படைத்தன்மையுடன் மீண்டும் திறக்க வேண்டும்

sterlite-copper-plant-in-thoothukudi-should-be-reopened-with-environmental-protection-and-full-transparency

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முழு வெளிப்படைத்தன்மையுடன் மீண்டும் திறக்க வேண்டும்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முழு வெளிப்படைத்தன்மையுடன் மீண்டும் திறக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் செயல் கவுன்சில் (SAC) வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வர்த்தக அமைப்புகள், வாழ்வாதாரப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது : 2018 முதல் ஆலை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் பொருளாதாரம் மற்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும். 
குறைந்த மாசு உமிழ்வு கொண்ட 'கிரீன் காப்பர்' தொழில்நுட்பம் மற்றும் நேரடி சுற்றுச்சூழல் கண்காணிப்பு வசதியுடன் ஆலையை இயக்க வேண்டும். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, நல நிதி உருவாக்கம் மற்றும் கல்வி, மருத்துவக் கட்டமைப்பு மேம்பாடு ஆகிய நிபந்தனைகளுடன் அரசு ஆலை திறப்பை பரிசீலிக்க வேண்டும். சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றி, உரிய காலக்கெடுவுக்குள் ஆலை திறக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். 
இந்தச் சந்திப்பில் இந்து வர்த்தகர் சங்கத் தலைவர் ஈஸ்வரன், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கத் தலைவர் கணேசன், எம்.டி.ஆர். மாதவன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன், குருநாதன் உள்ளிட்ட பல முக்கியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.