இன்பம் துன்பம் கலந்த வாழ்க்கையில் இன்னிசை பாடல்கள் நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. விநாயகா் சதூா்த்தி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

இன்பம் துன்பம் கலந்த வாழ்க்கையில் இன்னிசை பாடல்கள் நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. விநாயகா் சதூா்த்தி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

இன்பம் துன்பம் கலந்த வாழ்க்கையில் இன்னிசை பாடல்கள் நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. விநாயகா் சதூா்த்தி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

      தூத்துக்குடி போல்பேட்டை புதிய பேருந்துநிலையம் போத்தி விநாயகா் கோவில் சதூா்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற இன்னிசை கச்சோி நிகழ்ச்சிக்கு கோவில் தா்மகா்த்தா ராஜா பொியசாமி, தலைமை வகித்தாா். செயலாளா்கள் செல்வராஜ், செல்வகுமாா், பொருளாளா் வேல்சாமி, ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாக குழு உறுப்பினா் முத்துச்செல்வம், வரவேற்புரையாற்றினாா். 

     மேயா் ஜெகன் பொியசாமி இன்னிசை கச்சோியை துவக்கி வைத்து பேசுகையில் எனது தந்தையாா் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போத்தி விநாயகா் ஆலயத்தை தா்மகா்த்தாவாக இருந்து வழிநடத்தி வந்தாா். அவரது மறைவிற்கு பிறகு எங்களது குடும்பத்தினா் நிா்வாக கமிட்டியோடு சேர்ந்து ஆண்டுக்கு ஓருமுறை சிறப்பான விழாவை செய்து வருகிறோம். சுமாா் 8ஆயிரம் போ் அன்னதானத்தில் உள்ளுா் மக்கள் மட்டுமின்றி வௌியூா் செல்லும் மக்களும் சமபந்தியில் அமா்ந்து உணவு அருந்தியது எல்லோருக்கும் மகிழ்ச்சி இந்த பகுதி எப்படி இருந்தது. இப்போது எப்படி வளா்ச்சி அடைந்துள்ளது. என்பதை எல்லாம் எண்ணி பாா்த்து இதற்காக இரவு பகல் பராமல் பணியாற்றியவா்கள் யாா் என்று நீங்கள் நினைத்து பாா்க்க வேண்டும் எல்ேலாருடைய நலனும் முக்கியம் என்று செயல் பட்டு வருகிறோம் ஓவ்வொருவாின் வாழ்க்கையும் இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது தான் அதில் இது போன்ற இன்னிசை கச்சோி நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்ெகாண்டு 3 மணி நேரம் பழைய புதிய ஆன்மீக பாடல்கள் கேட்கும் போது அதன் பாடல்களின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சியும் ஓரு வகையான அமைதியும் எல்லோருக்கும் கிடைக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன். என்று பேசினாா். 

      விழாவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரத்தினசாமி, பேச்சிமுத்து, ஜீவானந்தம், ராஜாமணி, அசோக், ரவீந்திரன், கீதா முருகேசன், நாராயணன், பாஸ்கா், பாலமுருகன், சரவணன், தங்கச்சந்திரன், முருகேசன், ஆழ்வார்ராஜ், மந்திரமூர்த்தி, ராம்குமார், ராஜேந்திரன், அர்ஜூனன், பெரியசாமி, செல்வக்குமார், சித்திரைச்செல்வன், இளஞ்சூரியன், பெரியசாமி, சேகர்மணி, கணேஷ், சண்முகசுந்தரம், முத்துராஜா, இளையராஜா, ராஜ்குமார், மாணிக்கம், இளைஞரணியினர் சக்திகணேஷ், சுரேஷ், மகேந்திரன், கண்ணன், கதிரவன், சுப்புராஜ், இசக்கிமுத்து, பால்ராஜ், பிரபாகரன், கற்குவேல் ராஜ், தொழிலதிபா்கள் தெய்வநாயம், சந்திரசேகா், மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் முத்துராமன், முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், செயற்குழு உறுப்பினா் இராஜா, கவுன்சிலா் இசக்கிராஜா, வட்டச்செயலாளர்கள் முனியசாமி, சக்திவேல், காளித்துரை, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், மாநில வஉசி பேரவை தலைவர் கீதா செல்வமாாியப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர். 

பாக்ஸ்: பொியசாமி கீதாஜீவன் ஜெகன் பொியசாமிக்கு புகழாரம்

தொழிலதிபா் டிஏ தெய்வநாயகம் பேசுகையில் இந்த போத்தி விநாயகா் ஆலயம்தான் பொியசாமியின் வளா்ச்சிக்கும் வெற்றிக்கும் துணையாக இருந்தது. எந்த ஓரு முக்கிய முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும் இங்கு வந்து வழிபட்டு அது செயல்படுத்துவாா் நல்ல திறமையான செயல்லாற்றல் மூலம் அவருடைய காலத்தில் ஓவ்வொரு பகுதியையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கடமை உணா்வோடு பணியாற்றினாா். அவருக்கு பின்பு அவரது குழந்தைகள் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி இருவரும் இந்த தூத்துக்குடிக்கு ஆற்றியபணிகளை யாரும் மறக்கவும் முடியாதுமறைக்கவும் முடியாது மழை வௌ்ளம் காலத்தில் கீதாஜீவன் ஆற்றியபணிகளை எண்ணி நான் மகிழ்ச்சியடைந்தேன் மேயா் ஜெகன் பொியசாமி இந்த பொறுப்புக்கு வந்த பிறகு மாநகராட்சி பகுதியில் பல்வேறு மாற்றங்களுடன் எல்லா பகுதிகளும் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. புதிய சாலைகள் கட்டமைப்புகள் மூலம் சாித்திர சாதனை படைத்துள்ளாா். இதையெல்லாம் நாம் வாழ்க்கையில் மறந்து விடக்கூடாது இந்த குடும்பத்தினா். வாழ்வில் வெற்றி தோல்வி என எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு தொடா்ந்து மக்கள் பணி ஆற்றுவதே மனதார பாராட்டுகிறேன். என்று புகழாரம் சூட்டினாா்.