தூத்துக்குடி: குப்பைகளை பிரித்து கொடுப்பதன் மூலம் டெங்கு தடுப்பு - முத்துநகர் கடற்கரையில் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: குப்பைகளை பிரித்து கொடுப்பதன் மூலம் டெங்கு தடுப்பு - முத்துநகர் கடற்கரையில் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: குப்பைகளை பிரித்து கொடுப்பதன் மூலம் டெங்கு தடுப்பு - முத்துநகர் கடற்கரையில் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

*தூத்துக்குடி, அக்.18:* வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில், மாநகர் நல அலுவலர் மரு.எஸ்.ஆர்.கணேஷ் தலைமையில் பொது சுகாதார பிரிவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நேற்று (17.10.2026) மாலை முத்துநகர் கடற்கரை பூங்காவில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் புனித மரியன்னை கல்லூரி இணைந்து *"டெங்கு காய்ச்சல் தடுப்பதில் திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம்"* குறித்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு *மாநகராட்சி ஆணையாளர் சி.பிரியங்கா இ.ஆ.ப.* தலைமை தாங்கி பேசுகையில்,

> "சுற்றுச்சூழல் மேம்பாடு, இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி, குப்பைகளை மட்கும் குப்பை, மறுசுழற்சி கழிவுகள், சுகாதார கழிவுகள், சிறப்பு கவன கழிவுகள் என 4 வகையாக பிரித்து கொடுப்பது கட்டாயம். இதற்காக *திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026* நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

> பிரித்து கொடுக்காத வீடுகளில் இருந்து குப்பைகளை பொது இடங்கள், வடிகால்கள், காலி மனைகளில் வீசுவதால் மழைக்காலத்தில் வடிகால் அடைப்பு ஏற்பட்டு டெங்கு, மலேரியா பரவும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. விதிமீறுவோருக்கு நோட்டீஸ், அபராதம் விதிக்கப்படும்.

> பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேமித்த நீரை மூடி வைக்க வேண்டும், சுற்றுப்புறத்தில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், டெங்கு களப்பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

*நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்கள்:*

- புனித மரியன்னை கல்லூரி மாணவியர்கள் எழுதி இசையமைத்த விழிப்புணர்வு குறும்பாடலை ஆணையாளர் வெளியிட்டார்.

- துண்டு பிரசுரங்களுக்கு பதிலாக *QR Code* மூலம் விழிப்புணர்வு செய்திகள் பகிரப்பட்டன.

- மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் ப்ளுமன் ரெஜி செய்திருந்தார்.

- போட்டிகளில் வெற்றி பெற்ற பார்வையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர்கள் ராஜசேகரன், ராஜபாண்டியன், ஹரி கணேசன், சுகாதார ஆய்வாளர்கள், பரப்புரையாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.