தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணிக்கு சாட்டையடி கொடுத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை : கல்வித்துறையில் பெரும் பரபரப்பு*

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணிக்கு சாட்டையடி கொடுத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை : கல்வித்துறையில் பெரும் பரபரப்பு*

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணிக்கு சாட்டையடி கொடுத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை : கல்வித்துறையில் பெரும் பரபரப்பு*

*தூத்துக்குடி, நவ.19:*

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழங்கிய பணியாளர் நியமன ஒப்புதலுக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

குலசேகரப்பட்டினத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மட்டும் அரசு நிதி உதவி பெற்று செயல்பட்டு வரும் வள்ளியம்மையார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், ஆவண எழுத்தராக சாந்தி, அலுவலக உதவியாளராக வில்வஜோதி ஆகியோர் புலம்பெயர்தல் அடிப்படையில் 2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.

இப்பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் குறைவான மாணவிகளே பயின்று வருகின்றனர். 2018-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 238-ன் படி, 250 மாணவர்கள் இருந்தால் தான் ஒரு பணியிடம் நியமிக்க முடியும்.

2020-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட கல்வி அலுவலர் லட்சுமணசாமி, இப்பள்ளியில் 63 மாணவிகளே பயில்வதால் பணியிடம் நியமிக்க முகாந்திரம் இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளித்திருந்தார். அதன் பிறகு பணியில் இருந்த முதன்மை கல்வி அலுவலர்கள் நியமன ஒப்புதல் வழங்கவில்லை.

இதற்கிடையே, இடையில் இருந்த முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாக பணியாளர் நிர்ணய ஆணையை மட்டும் வழங்கியுள்ளார். சமூக ஆர்வலர்கள் புகார் மற்றும் செய்தி ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில், 2025-ல் முதன்மை கல்வி அலுவலராக இருந்த சிதம்பரநாதன், அரசாணையை பின்பற்றி அப்பணியிடங்களை உபரி என உத்தரவிட்டார்.

இதை கருத்தில் கொள்ளாமல், தற்போதைய மாவட்ட கல்வி அலுவலர் முனியசாமி பரிந்துரையின் பேரில், முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சிந்துராணி, முந்தைய உத்தரவை ரத்து செய்து, 2025-2026 கல்வி ஆண்டு முடிய 7 நாட்களே இருந்த நிலையில் திருத்திய பணியாளர் நிர்ணய ஆணையை பிறப்பித்துள்ளார். அதைத் தொடர்ந்து 3 நாட்களில் சாந்தி, வில்வஜோதி ஆகியோரின் நியமனங்களுக்கு ஒப்புதலும் வழங்கிவிட்டார்.

அரசாணையை மீறி அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, வழக்கறிஞர் பாஸ்கரன், பள்ளிக் கல்வித்துறை செயலர், பள்ளிக் கல்வி இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ஆகியோருக்கு புகார் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதன் பேரில், வழக்கறிஞர் பாஸ்கரன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.எச். சண்முகநாதன் ஆஜரானார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு, தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழங்கிய நியமன ஒப்புதலுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், வேறு எந்த நியமனங்களுக்கும் ஒப்புதல் வழங்கக் கூடாது எனவும், பிரதிவாதிகள் பதிலளிக்க வேண்டும் எனவும், முதன்மை கல்வி அலுவலர் மீதான புகார் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது