தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் சரக டிஐஜி வருடாந்திர ஆய்வு

தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் சரக டிஐஜி வருடாந்திர ஆய்வு

தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் சரக டிஐஜி வருடாந்திர ஆய்வு

தூத்துக்குடி :

திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் இன்று தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் பதிவேடுகள் மற்றும் பணிகளை ஆய்வு செய்து, காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து, ஒருங்கிணைந்த சிசிடிவி கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆர். சிவபிரசாத், இ.கா.ப., தூத்துக்குடி நகர உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சுனில் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

*புகைப்பட விளக்கம்:*

1. சிசிடிவி கண்காணிப்பு திரையை பார்வையிட்டு ஆய்வு செய்யும் டிஐஜி திருநாவுக்கரசு அவர்கள்.

2. கட்டுப்பாட்டு அறையில் பதிவேடுகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கும் காட்சி.