தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டு அகற்றாத வியாபாரிகள். இனிமேல் ஆக்கிரமிப்பு செய்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை.

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டு அகற்றாத வியாபாரிகள். இனிமேல் ஆக்கிரமிப்பு செய்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை.

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டு அகற்றாத வியாபாரிகள். இனிமேல் ஆக்கிரமிப்பு செய்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை.

     தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் ஆக்கிரமிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ப்ரியங்காவிற்கு தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தது. 

   இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. அதன்படி மாநகராட்சி அலுவலகம் முன்பு. காய்கறி மார்க்கெட் ரோடு. ஜெயராஜ் ரோடு. பூ மார்க்கெட் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கடந்த மூன்று நாட்களாக மாநகராட்சி நிர்வாகம் அந்தப் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் வசம் கூறப்பட்டு வந்தது. மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் சென்று ஆக்கிரமிப்பு அகற்றவில்லை என்றால் புதன்கிழமை மாநகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றும் என்று இறுதியாக கூறப்பட்டுள்ளது. 

     மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உத்தரவின்பேரில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் காந்திமதி தலைமையில் உதவி பொறியாளர்கள் ராகவி. ஜெயசூர்யா. அனு சௌந்தர்யா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கீர்த்தனா. விக்னேஷ். சுனபயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு அருகில் உள்ள காய்கறி மார்க்கெட் ரோடு ஜெயராஜ் ரோடு மற்றும் பூ மார்க்கெட் ரோடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக மாநகராட்சி நிர்வாகம் கூறியும் அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை எடுப்பதற்கு ஆக்கிரமிப்பாளர்களுக்கு மனம் இல்லாமலேயே இருந்தனர் இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது நாங்கள் எடுக்கிறோம் காலஅவகாசம் வேண்டும் என்று கூறினார்கள் அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நாங்கள் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கூறி வருகிறோம் நீங்கள் இன்னும் ஆக்கிரமிப்பு அகற்றவில்லை என்றால் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை வாகனங்கள் மூலம் ஏற்றி கொண்டு செல்லப்படும் அதன் பின்பு அபதார தொகை செலுத்திய பின்பு தான் பொருட்கள் திருப்பித் தரப்படும் என்று கூறினார்கள் இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்ற தாமதம் செய்து வந்தன வியாபாரிகள் அந்தப் பகுதியில் ஒரு பழக்கடை நிர்வாகம் பல்வேறு இடங்களில் பல்வேறு கடைகள் வைத்துள்ளது ஆனால் அந்த கடைகள் தான் முழு அளவில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அந்த பழக்கடையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றக் கூடிய போது காலம் தாழ்த்தி வந்தனர். அதுபோல பூ மார்க்கெட் பகுதியில் முழு அளவில் ஆக்கிரமிப்பு தான் இருந்தது அந்த ஆக்கிரமிப்பு மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் ஜெயராஜ் ரோடு. பூ மார்க்கெட். காய்கறி மார்க்கெட் பகுதிகளில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றிய மறுநாளே மீண்டும் அதே பகுதிகளில் ஆக்கிரமிப்பு தொடர்கதையாகவே வருகிறது குறிப்பாக காய்கறி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் பகுதிகளில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்லவோ இரு சக்கர வாகனத்தில் செல்லவும் மிகவும் சிரமப்படுகின்றனர் ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அந்தப் பகுதிகளில் தினசரி நேரில் சென்று பார்வையிட வேண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கையாகவே உள்ளது. ஆகையால் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் ஆக்கிரமிப்பு இல்லாத வகையில் மாநகராட்சி நிர்வாகம் அதற்குத் தகுந்தாற்போல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி அலுவலகம் பின்புறம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சாலை அமைக்கப்பட்டது மாநகராட்சி நிர்வாகம் ஆனால் அந்த சாலையை ஆக்கிரமித்து முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது அதையும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்ற சென்றபோது அங்கு இருந்த பெண் ஒருவர் அநாகரீகமான வார்த்தைகளால் அதிகாரிகளை ஒருமையில் பேசியது அதிர்ச்சியாகவுள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்ற சென்ற அதிகாரிகளை மிரட்டுவதும் வேடிக்கையாகவே உள்ளது.