ரூ.35-க்கு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவதா? ஸ்டெர்லைட் மின் ஆலையை திறக்க கோரிக்கை! தமிழக மின்துறை அமைச்சருக்கு தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம் கடிதம்
ரூ.35-க்கு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவதா? ஸ்டெர்லைட் மின் ஆலையை திறக்க கோரிக்கை! தமிழக மின்துறை அமைச்சருக்கு தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம் கடிதம்
தூத்துக்குடி: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, அரசு வெளிச்சந்தையில் 1 யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு வாங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அது குறித்து தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக மின்துறை அமைச்சருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம் செயலாளர் K.கணேசன் M.A., அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியதாவது.... மக்கள் எள்ளளவும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக என்ன விலை கொடுத்தாலும் வாங்கி வழங்கும் அரசு நிலைப்பாட்டிற்கு மிக்க நன்றி. இருப்பினும், இதற்கு மாற்று வழி உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 160 MW உற்பத்தி திறன் கொண்ட 2 மின் ஆலைகள் இயங்க அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக அறிகிறோம். ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலை தனியாகவும், மின்உற்பத்தி ஆலை தனியாகவும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது.
நவீன தொழில்நுட்பத்தில் பசுமைத்தாயிரம் உற்பத்தி செய்ய நிபுணர்குழு அமைத்து பரிசீலித்து அரசு அனுமதி வழங்க வேண்டி நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகியுள்ளதை அறிகிறோம்.
அதே சமயம் ஸ்டெர்லைட் மின் ஆலை சம்பந்தமாக வழக்கு எதும் இல்லை எனவும் அறிகிறோம். எனவே தமிழக அரசு "கோவிட்" சமயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை உயிர் காக்கும் ஆக்ஸிஜன் வழங்க உற்பத்திக்கு அனுமதித்தது போல, தற்போது ஸ்டெர்லைட் மின் ஆலை உற்பத்தி துவங்கவும் அனுமதி அளிக்க வேண்டுகிறோம்.
இதனால் இப்பகுதியில் சில நூறு பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசுக்கும் மின்வெட்டிலிருந்து எளிய நிவாரணம் கிடைக்கும். பரிசீலிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
tamilanda