தூத்துக்குடியில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
தூத்துக்குடியில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி, அக்.18: தமிழகம் முழுவதும் கூட்டுறவு, அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ரூபாய் 30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்க விழா இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் நடைபெற்ற விழாவை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், துவக்கி வைத்தார்.
மேலும் சன்னரக அரிசி ரூ.30-க்கும், தமிழக அரசின் அதிரடி விலை குறைப்பு மூலம் புழுங்கல் பொன்னி அரிசி ரூ.60, துவரம்பருப்பு ரூ.130, உளுந்தம் பருப்பு ரூ.140, பூண்டு ரூ.240, மல்லி (தனியா) ரூ.240, மிளகாய் ரூ.330 என சுமார் 30 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த சன்னரக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் ஓ.961 தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, ஓ.947 மதுரா கோட்ஸ் கூட்டுறவு பண்டகசாலை, டி சி 26 ஸ்பிக் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை, இ இ 400 துறைமுக சபை ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை, ஓ.1020 தூத்துக்குடி கூட்டுறவு பண்டகசாலை ஆகிய இடங்களில் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் இரா.இராஜேஷ், பொதுவியோக திட்ட துணைபதிவாளர் அ.சுப்புராஜ், தூத்துக்குடி சரக துணை பதிவாளர் மு.கலையரசி, மண்டல துணை மேலாளர் சிவகுமார், பண்டகசாலையின் செயலாட்சியர் வெ.பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
tamilanda