கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு - தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்கு!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு - தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்கு!
கள்ளக்குறிச்சி:
தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரம். மாவட்டத்தின் முதல் குடிமகனாக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது இந்த சம்பவம்.
புகார் என்ன? கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் ஜெ.இ. பத்மஜா அளித்த பாலியல் தொல்லை மற்றும் அத்துமீறல் புகார் தொடர்பான விசாரணையில் முக்கிய கட்டமாக, ஆட்சியரிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நிறைவடைந்துள்ளது.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அரசு நிகழ்ச்சிகளில் அத்துமீறி நடந்ததாகவும், முகாம் அலுவலக இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் மாவட்ட ஆட்சியர் ஜே. இ. பத்மஜா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷாநவாஸ் இ-யிடம் புகார் அளித்திருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வின்போது, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா குற்றம் சாட்டியிருந்தார்.
சம்பவம் நடந்தது எப்போது?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரம் தமிழக அரசியலில் சூறாவளியை கிளப்பி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் அம்மாவட்ட பெண் ஆட்சியருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாசமான மற்றும் தகாத குறுஞ்செய்திகளை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மட்டுமல்லாது நேரில் தவறான நோக்கத்துடன் அணுக முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் குறித்து 4 மாதங்களுக்கு முன்னரே உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும், எந்த நடவடிக்கையும் எம்எல்ஏ மீது எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
காலவரிசை - சர்ச்சை முதல் வழக்கு வரை:
நவம்பர் 9, 2026: வெடித்த சர்ச்சை
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்குத் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வாட்ஸ்அப்பில் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியர் பங்களாவுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. நவம்பர் 10, 2026: எம்எல்ஏ மறுப்பு
தன் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்த எம்எல்ஏ அருள் விக்னேஷ், பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ள ஆட்சியர் பங்களாவிற்குள் யாரும் அத்துமீறி நுழைய முடியாது என்றும், இது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட அவதூறு என்றும் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
*நவம்பர் 11, 2026: முதலமைச்சர் கண்டிப்பு?*
ஆட்சியர் குறித்து எம்எல்ஏ தகாத கருத்து தெரிவித்த விவகாரத்தில் முதலமைச்சர் அலுவலகம் ஏற்கனவே அவரை எச்சரித்திருந்தது உண்மைதான் என டிஐஜி ஏ. அருளரசு தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின.
*நவம்பர் 15, 2026: தேசிய மகளிர் ஆணையம் தலையீடு*
ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த விஷயத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஏழு நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது.
*நவம்பர் 18, 2026: உயர் நீதிமன்றத்தில் மனு*
எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஆர். திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
*நவம்பர் 23, 2026: ஆட்சியர் முறையான புகார்*
கடந்த சில வாரங்களாகவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு, கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி, தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் முறையான புகார் இல்லை எனக்கூறி அரசும், காவல்துறையும் கள்ள மவுனம் காத்து வந்தது.
இதனைத்தொடர்ந்து, நேற்று மாலையே கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ்மீது நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி எஸ்.பி.யிடம் மாவட்ட ஆட்சியர் பத்மஜா புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
5 பிரிவுகளில் வழக்கு:
இது தொடர்பாக அவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த முறையான புகாரின் அடிப்படையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
- பாலியல் நோக்கத்துடன் கூடிய அணுகுமுறை மற்றும் பாலியல் ரீதியான ஆபாசக் கருத்துகளைத் தெரிவித்தல் (BNS பிரிவு 75).
- தவறான நோக்கத்துடன் ஒருவரைப் பின்தொடர்தல் (Stalking - BNS பிரிவு 78(2)).
- அரசு உயர் அதிகாரியைக் கடமையைச் செய்ய விடாமல் தடுத்தல் (BNS பிரிவு 132) மற்றும் பணியிடத்தில் பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல் (பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4) ஆகிய பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல், பாலியல் சாயலுடைய கருத்து தெரிவித்தல், பாலியல் வற்புறுத்தல், பெண்ணை பின் தொடர்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
*உயர் நீதிமன்றம் தலையீடு:*
இந்த விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை உயர்மட்ட அதிகாரிகளின் கண்காணிப்பில் நேர்மையாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஐ.ஜி. காமினி கண்காணிப்பில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான மனுவை நேற்று ( நவம்பர் 24ஆம் தேதி) விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங்கையும், விசாரணையைக் கண்காணிக்கும் மேற்பார்வை அதிகாரியாக நிர்வாகப் பிரிவு ஐ.ஜி என். காமினியையும் நியமித்து உத்தரவிட்டிருந்தார்.
மேலும், பணியிடப் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனிப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட உள்ளகப் புகார் குழுவை அமைக்கவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தமிழக அரசும் கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா தலைமையில் 4 பேர் கொண்ட உள் புகார் குழுவை (ICC) அமைத்து 60 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
ஆட்சியரிடம் வாக்குமூலம்:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இன்று (நவம்பர் 25) நடைபெற்ற இந்த விசாரணையில், விசாரணை அதிகாரிகள் ஆட்சியரிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
எம்.எல்.ஏ-வுக்கு சம்மன், ராஜினாமா தகவல்:
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கக் கோரி காவல்துறையினர் அவரது இல்லத்திற்குச் சென்று சம்மன் வழங்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி நேற்று (நவம்பர் 25) எம்எல்ஏ சி. அருள் விக்னேஷின் இல்லத்திற்கு நேரில் சென்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் களத்தில்:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகப் புகாரில் சிக்கியுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தலைமைச் செயலாளர் எம். சாய் குமாரிடம் கடிதம் அளித்துள்ளது.
பணியிடத்தில் பெண் அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் அரசு அலுவலர்களின் கண்ணியத்தை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது பாரபட்சமற்ற முறையில் கடும் சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தலைமைச் செயலாளரிடம் அளித்துள்ள மனுவில் வலியுறுத்தியுள்ளது.
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கவிதா ராமு உருக்கம்:
சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது எழுத்துப்பூர்வமான புகார் அளித்துள்ளதால், இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்று நான் நம்புகிறேன் என மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மக்கள் பிரதிநிதியின் தகாத வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் நடத்தை சம்பந்தப்பட்ட இந்தச் சம்பவம் ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்திருந்தாலும், சமூக வலைதளங்களில் இது குறித்த பரபரப்பு ஏற்பட்ட பிறகுதான் நம்மில் பெரும்பாலானோருக்கு இது தெரியவந்தது என அவர் கூறியுள்ளார்.
*அடுத்து என்ன?
தமிழக அரசியலிலும், அதிகாரிகள் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அறிக்கை வரும் நவம்பர் 27-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
குறிப்பு:* இது ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு. எம்.எல்.ஏ தரப்பில் இதை மறுத்துள்ளார். விசாரணை நடந்து வருகிறது.
tamilanda