உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசைக் கண்டித்து தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவு ஆர்ப்பாட்டம்!
உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசைக் கண்டித்து தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவு ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி, நவ.25:
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட தமிழக அரசைக் கண்டித்து, தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அவமதித்ததை கண்டித்தும் நீதிமன்றத்தின் மாண்பை மதிக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், நீதிமன்ற உத்தரவுகளை மதித்து செயல்பட வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழக அரசு, இவ்வாறு செயல்படுவது ஜனநாயகத்திற்கும் நீதித்துறையின் மாண்புக்கும் எதிரானது என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவுகளை அரசியல் காரணங்களுக்காக புறக்கணிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும், தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் நீதிபாண்டியன், வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட துணைத்தலைவர் சண்முகசுந்தரம், அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் சின்னத்தம்பி பாண்டியன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் வேல்முருகன், மாவட்டச் செயலாளர் சுரேஷ், வடக்கு மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, வடக்கு மாவட்ட நகரத் தலைவர் சக்திவேல், மத்திய அரசு வழக்கறிஞர் பிரிவு மணிகண்ட நாகராஜன், மண்டலத் தலைவர் சண்முகநாதன், நாகராஜன், கலைச்செல்வி, காந்தி, உஷா, ஏ.பி.யு.எஸ். தலைவர் மகேந்திரன், மாவட்ட நீதிமன்றச் செயலாளர் செந்தட்டி, மாவட்ட துணைத்தலைவர் காளிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
tamilanda