தூத்துக்குடியில் மாநில அளவிலான செஸ் போட்டி - 377 வீரர்கள் பங்கேற்பு! 50-க்கும் மேற்பட்ட பன்னாட்டு மதிப்பீடு பெற்ற வீரர்கள் பங்கேற்பு

தூத்துக்குடியில் மாநில அளவிலான செஸ் போட்டி - 377 வீரர்கள் பங்கேற்பு! 50-க்கும் மேற்பட்ட பன்னாட்டு மதிப்பீடு பெற்ற வீரர்கள் பங்கேற்பு

தூத்துக்குடியில் மாநில அளவிலான செஸ் போட்டி - 377 வீரர்கள் பங்கேற்பு! 50-க்கும் மேற்பட்ட பன்னாட்டு மதிப்பீடு பெற்ற வீரர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி: தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகத்தின் அனுமதியுடன், தூத்துக்குடி மாவட்ட Ad Hoc Committee மற்றும் ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய மாநில அளவிலான செஸ் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 377 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பன்னாட்டு மதிப்பீடு பெற்ற வீரர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டியானது பொது பிரிவு, 8 வயதுக்குட்பட்டோர், 10 வயதுக்குட்பட்டோர் மற்றும் 12 வயதுக்குட்பட்டோர் என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

போட்டியை வருங்கால வைப்பு நிதி (PF) ஆணையர் சிவசண்முகம் தொடங்கி வைத்தார்.

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதன்மைச் சிறப்பு விருந்தினராக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான் கென்னடி கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

மேலும், வருங்கால வைப்பு நிதி ஆணையர் சிவசண்முகம் மற்றும் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட Ad Hoc Committee கன்வீனர், ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரகாஷ் ராஜ்குமார், Ad Hoc Committee உறுப்பினர் துரை ஜெயசீலன், கரிசுத்தா பால்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளருமான அருணா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

பிரிமியர் செஸ் கேர் சென்டர் நிறுவனத்தின் தலைவர் பிரேம்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பன்னாட்டு செஸ் நடுவர் (International Arbiter), FIDE சான்றளிக்கப்பட்ட பயிற்றுநருமான டாக்டர் சொக்கலிங்கம் பாலாஜி U, இப்போட்டியில் தலைமை நடுவராக (Chief Arbiter) பொறுப்பேற்று, 377 பேர் பங்கேற்ற இம்மாநில அளவிலான போட்டியை தொழில்நுட்ப திறத்துடன் சிறப்பான ஒருங்கிணைப்பில் வெற்றிகரமாக நடத்தினார்.

நிறைவாக தூத்துக்குடி மாவட்ட Ad Hoc Committee கன்வீனர் டாக்டர் பிரகாஷ் ராஜ்குமார் நன்றியுரை வழங்கினார்.

*???? போட்டியில் முதலிடம் பெற்றவர்கள்:*

- *Under 08:* R. Jenisha Sharon

- *Under 10:* Survesh Ram

- *Under 12:* Grithiek Roshan M

- *Open:* Ram S. Krishnan