திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு: தூத்துக்குடியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு: தூத்துக்குடியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
தூத்துக்குடி:
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்ததை வரவேற்று, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. இதனை வரவேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் திரண்டனர். அங்கு பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்கவும், தீப தரிசனம் செய்யவும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏ.எம். ராஜேஷ்,கனல், ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் இசக்கிமுத்து, சண்முகசுந்தரம், சிவராமன், காளிராஜா, மாசாணம், நவமணிகண்டன், சரஸ்வதி, மாவட்டச் செயலாளர் செல்வி, மண்டல் தலைவர்கள் சண்முகசுந்தரம், லிங்கசெல்வம், சங்கர், செல்வகுமார் ஓ.பி.சி. மாநிலச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், அணிப்பிரிவு மாவட்டத் தலைவர்கள் வெள்ளத்தாய், சக்திவேல், ஜெயக்குமார், ஓம்பிரபு மற்றும் இசக்கிதுரை, வன்னியராஜ், ஐயப்பன், ஜெயரூபி, லட்சுமி, வேல்கனிக்கொறையாரா, சி.எம். மாரியப்பன், கேசவன், சுதா, குருமூர்த்தி, சொக்கலிங்கம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
tamilanda