தூத்துக்குடி சிறுமியின் இதய சிகிச்சைக்கு நிதி உதவி அமைச்சர் ஸ்ரீநாத் வழங்கினார்.
தூத்துக்குடி சிறுமியின் இதய சிகிச்சைக்கு நிதி உதவி அமைச்சர் ஸ்ரீநாத் வழங்கினார். தூத்துக்குடி டு விபுரத்தில் உள்ள தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொகுதி எம்எல்ஏவும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் பொதுமக்களை சந்தித்து பேசி அனைவரது கோரிக்கையை மனுக்களையும் பெற்றார் நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளர் எஸ் பி ஆர் சாமுவேல்ராஜ் பொருளாளர் சிவக்குமார் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா மாளிகையில் தூத்துக்குடியைச் சேர்ந்த 9 வயது சிறுமி மகா ஸ்ரீக்கு இதய அறுவை சிகிச்சைக்காக உதவி செய்யும்படி அவர் விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி தமிழக வெற்றி கழகத் தொண்டர் அணி சார்பாக நிதி உதவி அளிக்கப்பட்டது அதனை அமைச்சர் ஸ்ரீநாத் சிறுமியிடம் நேரில் வழங்கி விரைவில் சிகிச்சை பெற்று குணமடைய வாழ்த்தினார் அப்போது சிறுமி குடும்பத்தினர் உடன் இருந்தனர் நிகழ்ச்சியின் போது மத்திய மாவட்ட இணை செயலாளர் கோல்டன் மாவட்ட நிர்வாகி ஷாமிலி சந்தோஷ் தொண்டரணி அமைப்பாளர் ரியாஸ் தூத்துக்குடி மத்திய மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் பன்னீர் உட்பட பலர் இருந்தனர்.
tamilanda