மிககடுமையாக போராடி மகுடம் சூடிய தவெக கொள்கையில் பின்வாங்குவது ஏற்புடையதல்ல''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் அறிவுறுத்தல்
மிககடுமையாக போராடி மகுடம் சூடிய தவெக கொள்கையில் பின்வாங்குவது ஏற்புடையதல்ல''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் அறிவுறுத்தல்
அரசியலில் மிகக்கடுமையாக போராடி மகுடம் சூடியுள்ள தமிழக வெற்றிக்கழகம் தமது கொள்கையில் இருந்து பின்வாங்குவது என்பது ஏற்புடையதல்ல என்று ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.,
தமிழக அரசியல் வரலாற்றில் மறைந்த மாபெரும் மக்கள் தலைவரும், திரையுலக நடிகருமான எம்.ஜி.ஆருக்கு பிறகு தற்போது தமிழக மக்கள் திரையுல நடிகர் ஜோசப் விஜய்க்கு மிகப்பெரும் ஆதரவுடன் மாபெரும் அங்கீகாரம் அளித்துள்ளனர்.
அரசியலில் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய நடிகர் ஜோசப் விஜய் கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலேயே 108இடங்களை கைப்பற்றி மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார்.
இனியொரு விதி செய்வோம் என்பதற்கேற்ப, ''தமிழகத்தில் புதிய மாற்றம் வேண்டும்'' என்று ஒட்டுமொத்தமாக ஆர்ப்பரித்த தமிழக மக்களின் மாபெரும் ஆதரவால் தமிழக வெற்றிக்கழகம் இன்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
தவெக தலைவர் ஜோசப் விஜய் அதிகப்படியான இடங்களை பிடித்தபோதும் அவர் தமிழக முதல்வராக மகுடம் சூட்டுவதற்கு எட்டுத்திக்கிலும் இருந்து எத்தனை எத்தனையோ இடையூறுகள் வந்து கொண்டே தான் இருந்தது.
இந்தநேரத்தில் தவெக தலைவர் ஜோசப் விஜய்யிடம் ''என்ன ஆனாலும் நீங்கள் தான் தமிழகத்தின் முதல்வர்'' என்று உறுதிபட சொன்னவர் தான் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல்.
இதற்கேற்ப பல்வேறு போராட்டங்களை வென்று தவெக தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அதுபோன்று சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் 144வாக்குகளை பெற்று வெற்றி சாதனை படைத்துள்ளார்.
புதிய மாற்றத்தை எதிர்பார்த்த தமிழக மக்களின் எண்ணத்திற்கேற்ப புதிய சக்தியாக வந்து தமிழக முதல்வராக மகுடம் சூட்டியுள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய்க்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேநேரத்தில், இன்றுள்ள விஞ்ஞான உலகில் கூட இறை நம்பிக்கை, இறை வழிபாடு, ஜாதகம், காலநேரம் கணித்தல், ஜோதிடம், பரிகாரம் என எண்ணற்ற வழிபாட்டு முறைகள் மக்களிடத்தில் மிகப்பெரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நம்பிக்கைக்கு ஜோதிடர்கள் தான் உயிர் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவரான மாண்புமிகு., முதல்வர் ஜோசப் விஜய் தனது அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் அவர்களை நியமித்ததை ஒட்டுமொத்த ஜோதிடர்கள் சார்பில் நான் மனமுவந்து வரவேற்கிறேன்.
சொல்லப்போனால் இதில் குறை சொல்வதற்கு என்று எதுவுமில்லை தான். ஆனால், பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் ஆட்சியை கைப்பற்றி மகுடம் சூட்டியுள்ள தவெக தலைவர் யாரோ எவரோ சொன்னார்கள் என்பதற்காக ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலை அப்பொறுப்பில் இருந்து திடீரென விடுவித்துள்ளது ஏற்புடையதல்ல.
தமிழகத்தில் புதிய சாதனை படைத்திடும் வகையில் மணிமகுடம் சூட்டியுள்ள தமிழக வெற்றிக்கழகம் இனியாவது யாருக்காகவும் தமது கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்கக்கூடாது. தமது நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்திடவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
=========================
tamilanda