ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐ ஆர் எஸ் போன்ற பயிற்சி பெறும் மாணவர்களுக்கு முறையான பயிற்சியும் இலவச தங்கும் விடுதியில் இலவச உணவும் தரமான முறையில் வழங்க தமிழ்நாடு அருந்ததியர் சங்க மாநில தலைவர் கே ஏ வரதராஜன், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் வேண்டுகோள்

ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐ ஆர் எஸ் போன்ற பயிற்சி பெறும் மாணவர்களுக்கு முறையான பயிற்சியும் இலவச தங்கும் விடுதியில் இலவச உணவும் தரமான முறையில் வழங்க தமிழ்நாடு அருந்ததியர் சங்க மாநில தலைவர் கே ஏ வரதராஜன், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் வேண்டுகோள்

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு குடிமைப் பணி தேர்வுக்கான பயிற்சி டாக்டர் அம்பேத்கர் சென்டர் பார் எக்ஸலன்ஸ் என்ற அமைப்பின் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.இந்த மாணவர்களிடம் மாதந்தோறும் உணவுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில நேரங்களில் உணவு கொடுப்பது நிறுத்தப்படுகிறது இதனால் மாணவர்கள் உணவுக்கு வழியில்லாமல் 10 கிலோமீட்டர் தள்ளி உள்ள திருவாரூரில் இருந்து உணவினை ஆர்டர் செய்து அதிக விலை கொடுத்து உணவைப் பெற்றும் பல நேரங்களில் உணவு கிடைக்காமல் உண்ணாமலும் பயிற்சி பெற்று வருகிறார்கள். மத்திய அரசின் மூலம் செயல்படும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐ ஆர் எஸ் போன்ற பயிற்சி பெறும் மாணவர்களுக்கு முறையான பயிற்சியும் இலவச தங்கும் விடுதியில் இலவச உணவும் தரமான முறையில் வழங்க தமிழ்நாடு அருந்ததியர் சங்க மாநில தலைவர் கே ஏ வரதராஜன், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் வேண்டுகோள்

விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் கே வரதராஜன் அவர்கள் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் முனிராசு மாநில துணைத்தலைவர் எஸ் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில்19.07.2026 அன்று தூத்துக்குடி சித்ரா லாட்ஜில் வைத்து நடைபெற்றது பொது குழுவில் புதிய மாவட்ட தலைவராக எம். ராஜ்அவர்கள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பழைய நிர்வாக குழு கலைக்கப்பட்டது. பொது குழுவில் தூய்மை பணியாளர்கள் நலன் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் நிர்வாகிகளை நியமிக்க புதிய மாவட்ட தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. பொதுக்குழுவில் மத்திய அரசு வழக்கறிஞர் பால முருகன்,மின்சார வாரியம் கருப்பசாமி,ஓய்வு பெற்றோர் நல சங்க பொறுப்பாளர் சண்முகவேல், காவல் சார்புஆய்வாளர் பால்ராஜ்,சமூக ஆர்வலர்கள் ஜவகர்,தர்மர் சேதுராமன் பழக்கடை கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் வழக்கறிஞர் சிவா சுப்ரமணியம் நன்றி கூறினார்.