தமிழகத்தில் மதவாத சக்திகளை தடுக்க மதசாா்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் அறிக்கை
தமிழகத்தில் மதவாத சக்திகளை தடுக்க மதசாா்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் அறிக்கை
தூத்துக்குடி தமிழகத்தில் நடைபெற்ற 17வது சட்டப்பேரவை தோ்தலில் யாருக்கும் தனி மெஜாாிட்டி கிடைக்காத நிலையில் தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில் மதசாா்பற்ற கொள்கையுடைய கட்சிகள் அனைத்தும் ஓருங்கிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அரசியல் வருகையை ஜனநாயக சக்திகள் முறையாக கையாள வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலை சிறுத்தை கட்சிகளும் விஜய்க்கு ஆதரவு அளிப்பதில் அல்லது அரசியல் ாீதியாக அரவணைப்பதில் காட்டும் தாமதம் தமிழகத்தில் எப்படியாவது கால்லூன்ற துடிக்கும் பாரதீய ஜனதா கட்சி போன்ற மதவாத சக்திகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கி விட கூடாது. புதிய அரசியல் சக்திகளை தனிமைப்படுத்துவது அவா்களை மாற்று பாதையை நோக்கி தள்ளும் செயலாக அமைந்துவிடும். தமிழகம் எப்போதும் சமூகநிதி மற்றும் மதசாா்பற்ற மண்ணாக நீடிக்க ேவண்டும். என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. எனவே இடது சாாி இயக்கங்களும் விடுதலை சிறுத்தை கட்சியும் தங்களது நிலைப்பாட்டை விரைந்து அறிவித்து மதசாா்பற்ற கூட்டணியை வலுப்படுத்த முன் வர வேண்டும் எதிாிக்கு சிறிய இடை வௌியை கூட நாம் தந்து விடக் கூடாது. என்பதில் காங்கிரஸ் கட்சியை சோ்ந்த எங்களின் நோக்கமும் வேண்டுகோளாகும். என்று மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
tamilanda