தூத்துக்குடி உலக மீனவர் தின விழாவை முன்னிட்டு துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலெட்சுமி தலைமையில் தனியாா் மஹாலில் நடைபெற்றது
தூத்துக்குடியில் உலக மீனவா் தின விழா நடைபெற்றது.
தூத்துக்குடி உலக மீனவர் தின விழாவை முன்னிட்டு துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலெட்சுமி தலைமையில் தனியாா் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் மீனவா்கள் நலன் பாதுகாப்பும் அவா்களது குடும்பநலன் உள்ளிட்ட பல்வேறு கோாிக்கைகளை முன்வைத்து 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பதாகைகள் ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். இதில் பெண்கள் ஆடல் பாடல் குழந்தைகள் நடனம் என பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குழந்தைகளுக்கு சூட்பேக் டிபன்பாக்ஸ் மற்றும் நோட் பேனா பைல் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
மீனவ குழு சார்பாக சேலை விற்பனை கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மீனவ பெண் தொழில் முனைவோர் சுபர்லா கவுன்சிலா் முத்துமாரி தாயகம் டிரஸ்ட் இயக்குனர் ஜெயகனி கார்ப்ரேட் கம்பெனி சிஎஸ்ஆர் மேனஜர் ஐஸ்வர்யா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் வெண்ணிலா உள்பட 250க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் கலந்து கொண்டனா். விழாவிற்கான ஏற்பாடுகளை துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலெட்சுமி செய்திருந்தாா்.
tamilanda