வரும் நவ.24 கார்த்திகை தீப தினத்தன்று மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி : தூத்துக்குடி பாஜகவினர் கொண்டாட்டம்

வரும் நவ.24 கார்த்திகை தீப தினத்தன்று மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி : தூத்துக்குடி பாஜகவினர் கொண்டாட்டம்

வரும் நவ.24 கார்த்திகை தீப தினத்தன்று மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி : தூத்துக்குடி பாஜகவினர் கொண்டாட்டம் 

*தூத்துக்குடி, நவ.20:*

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் ஒரு முறை மட்டும் இடைக்கால அனுமதி வழங்கியதை வரவேற்று, தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு இன்று (நவ.20) பிறப்பித்த உத்தரவில், வரும் நவ.24 கார்த்திகை தீப தினத்தன்று மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்துள்ளது. அதே சமயம், இது எந்தவித நிரந்தர உரிமையையும், வழக்கத்தையும் உருவாக்காது என்றும், அடுத்த ஆண்டுகளுக்கு முன்னுதாரணமாக கொள்ள முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள தீபத்தூண் தன்மை, நில உரிமை குறித்த முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை 2027 ஜனவரி 2-வது வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

தீபம் ஏற்றும் குழுவை தேவஸ்தானம் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்றும், மதுரை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைப்பு அதிகாரியாக செயல்படுவார் என்றும், பொதுமக்கள் கூட்டம், ஊர்வலம், கோஷம் எழுப்புதல் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அருகில் உள்ள தர்காவுக்கு செல்லும் பக்தர்களின் வழிபாட்டுக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை வரவேற்று, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது "முருகனுக்கு அரோகரா" என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.எம்.ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராமன், இசக்கிமுத்து, காளிராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மாவட்டச் செயலாளர் செல்வி, ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா, மண்டலத் தலைவர்கள் சண்முகசுந்தரம், லிங்கசெல்வம், செல்வசங்கர், சண்முகநாதன், அணிப்பிரிவு மாவட்டத் தலைவர்கள் ஆர்.ஜெயக்குமார், வெள்ளத்தாய், சக்திவேல், பாலாஜி, ஓம் பிரபு, ஞானபிரகாசம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.