தூத்துக்குடியில் காங்கிரஸ் கவுன்சிலா்கள் முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் 50 பேர் திமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடியில் காங்கிரஸ் கவுன்சிலா்கள் முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் 50 பேர் திமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை திமுக காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்து இரண்டு அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவராக இருந்த முரளிதரன் தலைமையில் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலா்கள் சந்திரபோஸ். எடின்டா. முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், மண்டலத்தலைவா் ராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் சாந்திமோி, விவசாய அணி தலைவர் பாலசுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜெயகிங்ஸ்டன், துணைத்தலைவர் டைட்டஸ் மாவட்ட மீனவரணி தலைவர் மிக்கேல்பா்னாந்து, மாவட்ட செயலாளர் சேகா், துணைத்தலைவர்கள் சின்னக்காளை, முத்துராஜ், மாநகர செயலாளா் நாராயணசாமி, வாா்டுதலைவா்கள் இம்மானுவேல்,கோபி, வில்சன், ஜோசப், வாசிராஜன், உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அனைவரையும் வரவேற்று கருப்பு சிவப்பு சால்வை அணிவித்து வேஷ்டி மற்றும் சேலை வழங்கி மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் மாவட்டம் மற்றும் மாநகர பொறுப்பில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளீா்கள். நாம் எல்லோரும் இணைந்து ஓற்றுமையாக பணியாற்றுவோம். எப்போதும் போல் மக்களுக்காக என்றும் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம் அனைவரும் திமுக வளா்ச்சிக்கு உழைக்க வேண்டும் என்று கூறினார்.
திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன்,மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன் துணை மேயா் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமாா், மாவட்ட மருத்துவ அணி தலைவா் அருண்குமாா், பொறியாளர் அணி தலைவா் பழனி, வட்டச்செயலாளர் சுரேஷ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, பகுதி அணி அமைப்பாளர்கள் சூா்யா. செல்வம், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனா்.
பின்னா் திமுகவில் இணைந்த முரளிதரன் கூறுகையில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளோம் 54 வார்டு தலைவர்கள் தூத்துக்குடியில் உள்ளார்கள் அதில் 27 வார்டு தலைவர்கள் திமுகவில் இணைந்துள்ளனர் இதற்கு முக்கியமான காரணம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை தடுமாறி சென்றுள்ளது காங்கிரஸ் கட்சி கொள்கைகளை புறம் தள்ளி விட்டு செயல்பட்டு வருகிறது. 14 ஆண்டுகளாக தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து பயணம் செய்து வந்தது. இரண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்றி உள்ளோம் தற்போது தவறான முடிவால் இரண்டு அமைச்சர்கள் பதவிக்காக காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. குறிப்பாக தேர்தல் காலத்தில் நாங்கள் எல்லோரும் கீதாஜீவன் வெற்றிக்காக பாடுபட்டோம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் சகாயராஜ் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி இருவரும் கூட்டணியில் இருந்து கொண்டு தவறான தகவல்களை பரப்பி வந்தனர் தேர்தலின் போது கீதாஜீவனிடம் ஏராளமான பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி உள்ளனர் ஸ்டெர்லைட் ஆதரவாளர் தான் பெருமாள்சாமி. நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் கூட தமிழக வெற்றி கழகத்திற்கு தான் வாக்களித்தேன் என்று பேட்டி கொடுக்கிறார் 36 ஆண்டுகாலம் நான் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறேன் ஒன்பது ஆண்டுகால மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து உள்ளேன். இது குறித்து தலைமையிடம் பலமுறை கூறினோம் எதையும் கண்டு கொள்ளவில்லை உண்மையான காங்கிரஸ் கட்சியினர் நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளோம் தொண்டர்களின் கருத்துக்களை அறிந்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்கள் பெரும்பாலான காங்கிரஸ் கட்சியினர் வேறு ஒரு நபரை கூறினார்கள் ஆனால் தலைமை சகாயராஜை நியமித்துள்ளது கடந்த எட்டு ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் ஒதுங்கி இருந்தவர் தான் சகாயராஜ் இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து நாங்கள் விலகுவதற்கு காரணம் பெருமாள்சாமியும் சகாயராஜீம் தான். காங்கிரஸ் கட்சி தற்போது சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது.தமிழக முதலமைச்சா் விஜய்க்கு கேரளா முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு அழைத்த போதும் செல்லவில்லை தற்போது வரை வாழ்த்தும் கூறவில்லை அவா் பிஜேபியன் ஓரு அங்கமாக தான் திகழ்கிறாா் நாங்கள் திமுக விற்கு கடைசி வரை விசுவாசமாக இருந்து பணியாற்றுவோம் என்று கூறினார்.
tamilanda