தூத்துக்குடி ஏரல் அருகே சிறுமிக்கு நீதி கேட்ட குடும்பத்தின் மீது தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு: சட்ட உரிமைகள் கழகம் கண்டனம்

தூத்துக்குடி ஏரல் அருகே சிறுமிக்கு நீதி கேட்ட குடும்பத்தின் மீது தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு: சட்ட உரிமைகள் கழகம் கண்டனம்

தூத்துக்குடி ஏரல் அருகே சிறுமிக்கு நீதி கேட்ட குடும்பத்தின் மீது தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு: சட்ட உரிமைகள் கழகம் கண்டனம்

தூத்துக்குடி, அக்.26:

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, கணேசபுரம் பகுதியில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மீது கும்பல் ஒன்று கொடூர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் தனுஷ்கோடி என்பவர் படுகாயமடைந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டை, அரிவாள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் Dr. S.R. செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"சிறுமிக்கு நேர்ந்ததாக கூறப்படும் பாலியல் தொல்லையை தட்டிக்கேட்டு புகார் அளித்த குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை சட்ட உரிமைகள் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், "இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது எந்தவித சமரசமுமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் உரிய பாதுகாப்பு மற்றும் தேவையான ஆதரவை வழங்க வேண்டும். சிறுமியின் அடையாளம் மற்றும் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

புகார் அளிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் கடமை. இச்சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

*குறிப்பு: பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர், அடையாளம் தொடர்பான விவரங்கள் சட்டப்படி வெளியிடப்படவில்லை.*