திறமைகளை வளா்த்துக்கொண்டால் எல்லாத்துறைகளிலும் வாழ்க்கையில் சாதிக்கலாம் குறுக்குசாலை கல்லூாி விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

திறமைகளை வளா்த்துக்கொண்டால் எல்லாத்துறைகளிலும் வாழ்க்கையில் சாதிக்கலாம் குறுக்குசாலை கல்லூாி விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

திறமைகளை வளா்த்துக்கொண்டால் எல்லாத்துறைகளிலும் வாழ்க்கையில் சாதிக்கலாம் குறுக்குசாலை கல்லூாி விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா். 

    தூத்துக்குடி குறுக்குச் சாலையில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில், மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி, கலை மற்றும் பண்பாட்டுத் திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில் ஜிஜே ஆா்ட் பீஸ்ட் 2026 என்ற கலைத் திருவிழா பள்ளி மாணவர்களின் அறிவுத்திறன், கற்பனைத்திறன். படைப்பாற்றல் மற்றும் கலைத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. 

பாிசளிப்பு விழாவிற்கு கல்லூரிச் செயலாளர் ஜீவன்ஜேக்கப் தலைமை தாங்கினாா். கல்லூரி முதல்வர் இளங்குமரன் வரவேற்புரையாற்றினாா். உதவிப் பேராசிரியர் கிருஷ்ணபிரியா தொகுத்து வழங்கினார்.

     தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டி, பென்சில் ஒவியப்போட்டி, அறிவியல் மற்றும் புத்தாக்கக்கண்காட்சி, ரங்கோலி, தனிப்பாடல் போட்டி, நாட்டுப்புற குழு நடனப் போட்டி, ஃப்யூஷன் தனிநடனப்போட்டி, ஒரு தலைப்பின் சாதக பாதகங்களை பற்றி பேசும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன இப்போட்டியில் பதினெட்டு பள்ளிகளைச் சேர்ந்த 294 மாணவ மாணவியா்கள் பங்கேற்றுத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி, அவர்களுக்குச் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் பங்கேற்ற 18 பள்ளிகளில் சாதனைகளின் அடிப்படையில் சிறப்பிடம் பெற்ற கோப்பையை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி கீழமுடிமண் மாணவ மாணவிகள் ஒட்டு மொத்த சாதனையாளருக்கான வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. மாணவர்களின் தனித்திறனை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவித்து போட்டிகளில் பங்கேற்கச் செய்த ஒவ்வொரு பள்ளி சார்ந்த ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி   

விழாவில் வடக்கு மாவட்ட திமுக செலயாளரும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் மாணவர்கள் கல்வியுடன் கலை மற்றும் பண்பாட்டுத் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித் திறன்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து பயிற்சி செய்து வாழ்வில் முன்னேற வேண்டும்” பள்ளிக்கல்வி மற்றும் பல்வேறு போட்டிகள் மட்டுமின்றி எந்த துறையை தோ்ந்தெடுக்கிறோமோ அதில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தால் அதில் எல்லோரும் வெற்றி பெற்று சாதனையாளராகலாம். அதற்கேற்றாற்போல் திறமைகளை வளா்த்து கொள்ள வேண்டும். என்று என்று பேசினாா். அறக்கட்டளை உறுப்பினர் சுதன்கீலர் மற்றும் சுதாசுதன் உள்பட பலா் கலந்து கொண்டனா். 

      கலாச்சார மன்றத்தினர் துணை ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் ரேவநந்தினி, மற்றும் கலாச்சார மன்றத்தின் உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். உதவிப் பேராசிரியர் அகஸ்டின் அற்புத லிஸி நன்றியுரை வழங்கினார்.