தூத்துக்குடியில் விதிமீறி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் விளம்பர போர்டுகள் அகற்றம்! சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்!

தூத்துக்குடி, நவ.20: தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக அமைக்கப்படும் தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அவ்வப்போது அகற்றி வருகின்றனர்.

குறிப்பாக விதிமுறைகளுக்கு முரணாக அமைக்கப்படும் விளம்பர பதாகைகள், பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் உடனுக்குடன் அகற்றப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், மாநகரப் பகுதிகளில் விதிமுறைகளுக்கு முரணாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு *ரூ.10,000 அபராதம்* விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா, தெரிவித்ததாவது: பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனுமதியின்றி, விதிகளுக்கு முரணாக பதாகைகள், பேனர்கள் அமைத்தல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுவதை முற்றிலுமாக கைவிட வேண்டும். இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

*- ONE TAMIL NEWS | தூத்துக்குடி*

---

அண்ணா, இதுக்கும் போஸ்டர் வேணுமா?