தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் புல்டன் ஜெசின் தலைமையில் பாத்திமா நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் புல்டன் ஜெசின் தலைமையில் பாத்திமா நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் புல்டன் ஜெசின் தலைமையில் பாத்திமா நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி, நவ, 22

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 46 வது வார்டு பகுதியான பாத்திமா நகர் பகுதியில்

நீண்ட காலமாக தேங்கி நிற்கும் கழிவுநீர், குப்பைக் கழிவுகள், முட்புதர்கள் மற்றும் நாத்து செடிகளை வளர்ந்து கிடப்பதாகவும் இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் பேசுவதோடு கொசு தொல்லை மூலம் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவும் மேற்படி இடங்களை சுத்தப்படுத்தி சாக்கடை கழிவுநீர்கள் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாத்திமா நகர் பகுதி மக்கள் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்க்காமல் இருக்கிறது என அப்பகுதி பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் , கொசுத் தொல்லையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டியும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும், மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்தும் பாத்திமா நகர் பகுதி மக்கள் சார்பில் மாபெரும்

ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுகாதார சீர்கேடாக இருக்கும் பாத்திமா நகர் 6 வது தெரு கிழக்குப் பகுதியில் 

தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் 

புல்டன் ஜெசின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சியின் மெத்தனப் போக்கை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாத்திமா நகர் மக்கள் தன்னெழுச்சியாக பெருந்திரளாக கூடினர். அப்பகுதிக்கு வருகை தந்த போலீசார் நகராட்சி நிர்வாகத்திற்கு மக்களின் கோரிக்கையை உடனடியாக எடுத்து செல்வதாகவும் தொடர் போராட்டம் நடத்த வேண்டாம் விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்தனர். ஆனால் அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தினர் தொடர்ந்து மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர். இன்னும் ஒரு சில தினங்களில் இதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுக்காத பட்சத்தில் பாத்திமா நகர் பகுதி மக்கள் தன் எழுச்சியாக மாபெரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவோம் எனவும் தெரிவித்தனர்.. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய 

தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் 

புல்டன் ஜெசின் 

 பாத்திமா நகர் மக்கள் துர்நாற்றம் மற்றும் கொசு தொல்லையால் நாள்தோறும் படும் அவதிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், தூத்துக்குடி மாநகர் நல அலுவலர், ஆகியோர் நேரில் ஆய்வு செய்தால் இப்பகுதி மக்கள் படும் வேதனைகள் தெரியவரும் 

 ஆகையால் மேலும் கால தாமதம் படுத்தாமல் போர்க்கால அடிப்படை இப்பகுதியில் உள்ள கழிவுகளை அகற்ற மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் முன் வர வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் மாநகராட்சி நிர்வாகத்தினர் மெத்தன போக்கு காட்டினால் விரைவில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரின் ஆதரவோடு மாபெரும் தொடர் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.