தூத்துக்குடி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக, மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வரும் 22-ம் தேதி நடக்கிறது.
தூத்துக்குடியில் வரும் 22-ல் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்
தூத்துக்குடி, நவ.20 :
தூத்துக்குடி மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் சார்பாக, நடுவர்களுக்கான சிறப்பு ஆயத்தக் கூட்டம், தூத்துக்குடி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தில் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக, மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வரும் 22-ம் தேதி நடக்கிறது.
நவ.4-ம் தேதி வரை விண்ணப்பத்தை பதிவு செய்த வீரர், வீராங்கனைகள் மட்டும், தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாஸ்டர் தடகளப் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
இப்போட்டிகளில் 30 வயது, வயதிற்கு மேற்பட்ட சுமார் 426 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இப்போட்டியினை சிறப்பாக நடத்திட, நடுவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட மாஸ்டர் தடகள சங்க தலைவர் பயாஸ் பாய், செயலாளர் முனியசாமி முரளி, பொருளாளர் மெர்சி பத்மாவதி, துணைத் தலைவர் ஆனந்தராஜ், லாரன்ஸ், ராகவானந்தம், ராம்குமார், மாரிச்சாமி, இணைச் செயலாளர் ஏஞ்சலின், கோயில் ராஜ், செந்தில்குமார், சில்வா பெர்னாந்த், ருக்மணி, ஜாஸ்மின், கிருஷ்ணவேணி, அழகு துரை, ஆரோக்கியம், சுப்பிரமணியம் மற்றும் சீனியர் துணை தலைவர் ஸ்டீபன் தியாகராஜன், வாக்கு, செயற்குழு உறுப்பினர்கள் ஹேமா வாசு, ஆண்ட்ரியா, ரெட்லின், ஜின்சியா, செலீன், எல்சா, வனிதா, சங்கர் கணேஷ் மற்றும் நடுவர்கள் டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் புதுராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஏற்பாடுகளை, தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்க மாநில இணைச் செயலாளர் குப்புசாமி செய்திருந்தார். தூத்துக்குடி மாஸ்டர் தடகள சங்கத்தின் செயலாளர் முனியசாமி முரளி நன்றி கூறினார்.
tamilanda