தூத்துக்குடியில் முதல்வா் விஜய் பிறந்தநாளையொட்டி 520 பேருக்கு நலத்திட்ட உதவிகளை SDR சாமுவேல்ராஜ் வழங்கினார். வக்கீல் DR.பன்னீர் ஏற்பாடு செய்திருந்தார்.

தூத்துக்குடியில் முதல்வா் விஜய் பிறந்தநாளையொட்டி 520 பேருக்கு நலத்திட்ட உதவிகளை SDR சாமுவேல்ராஜ் வழங்கினார். வக்கீல் DR.பன்னீர் ஏற்பாடு செய்திருந்தார்.

தூத்துக்குடியில் முதல்வா் விஜய் பிறந்தநாளையொட்டி 520 பேருக்கு நலத்திட்ட உதவிகளை SDR சாமுவேல்ராஜ் வழங்கினார். வக்கீல் DR.பன்னீர் ஏற்பாடு செய்திருந்தார்.

       தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் 52வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி 50வது வாா்டு அமுதாநகாில் நடைபெற்ற விழாவிற்கு வாா்டு பொறுப்பாளா் வழக்கறிஞா் டாக்டா் பன்னீா் தலைமையின் ஏற்பாட்டில் நிா்வாகிகள் இபி தொழிற்சங்க நிர்வாகி ஆக்னல் சேசுராஜ், வீரமணி, சிவராமன், முனியசாமி, ராமு, சண்முகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராஜா வரவேற்புரையாற்றினாா். 

      200 மாணவ மாணவிகளுக்கு நோட்புக் பள்ளி சீருடை புத்தகப்பை பெண்கள் 320 பேருக்கு சேலைகள் என 520 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ், வழக்கறிஞர் டாக்டா் பன்னீா் ஆகியோா் வழங்கினாா்கள். முன்னதாக 10 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. 

      மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ் பேசுகையில் தமிழகத்தில் தற்போது உள்ள தலைவர்களில் ஒரே தலைவர் தமிழக முதலமைச்சர் விஜய் மட்டும் தான் நல்ல தலைவராக உள்ளார் கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. எல்லா கட்சியும் தமிழகத்தில் முடிந்து விட்டது இனி ஒரே கட்சி தான் அதுவும் தமிழக வெற்றி கழகம் தான். தமிழகத்தை காப்பாற்ற தமிழக முதல்வர் விஜய்யால்தான் முடியும் மக்களுக்கு நல்ல திட்டங்களையும் செய்ய முடியும். அதனால்தான் மாற்றுகட்சியிலிருந்தும் விலகி பலா் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனா். அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்றாா். 

     வழக்கறிஞர் டாக்டா் பன்னீா் பேசுகையில் தமிழக முதலமைச்சர் விஜய் தூத்துக்குடியில் பல்வேறு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு மூடப்பட்டுள்ளது அதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில் எல்லா தரப்பினரும் ஏற்றுக்கொண்ட ஓரே தலைவராக விஜய் மட்டும் தான் திகழ்வாா். மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு அனைத்து திட்டங்களும் விரும்பிய படி கிடைக்கும் என்றாா். 

விழாவில் மாவட்ட பொருளாளா் சிவக்குமாா், கேபிள் சிவா, முருகன், மணிகண்டன், ரமேஷ், சிலுவைப்பட்டி பாாி, உள்பட பலா் கலந்து கொண்டனா் பாபு நன்றியுரையாற்றினாா்.