தமிழகத்தின் 14-வது முதலமைச்சராக விஜய் நாளை பதவி ஏற்கிறார் ; 9 அமைச்சர்களும் பதவியேற்பு..!

தமிழகத்தின் 14-வது முதலமைச்சராக விஜய் நாளை பதவி ஏற்கிறார் ; 9 அமைச்சர்களும் பதவியேற்பு..!

தமிழகத்தின் 14-வது முதலமைச்சராக விஜய் நாளை பதவி ஏற்கிறார் ; 9 அமைச்சர்களும் பதவியேற்பு..!

         சிறப்பு செய்தி. மே. 09 :

          நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சி 34.92% வாக்குகள் பெற்று 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் த.வெ.க-விடம் 108 இடங்கள் மட்டுமே உள்ளன. அதிலும் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் ஒன்றில் ராஜினாமா செய்தால் 107 தொகுதிகள்தான் இருக்கும்.

         இதனால் கூடுதலாக 11 இடங்கள் த.வெ.க-விற்கு தேவைப்படும் நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி த.வெ.க-விற்கு ஆதரவு அளித்தது. இதனையடுத்து, மேலும் 6 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், அ.தி.மு.க, பா.ம.க., மா.கம்யூ., இ.கம்யூ., வி.சி.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பியது. த.வெ.க-விற்கு ஆதரவு கொடுப்பது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என வி.சி.க-வும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தெரிவித்திருந்தன. அதிமுக தவெகவிற்கு ஆதரவு அளிக்காது என தங்களது முடிவை உறுதியாக தெரிவித்துவிட்டனர்.

         இதனிடையே, த.வெ.க தலைவர் விஜய், புதன்கிழமை ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு நேரில் கடிதம் கொடுத்தார். ஆனால், தனி பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து த.வெ.க தலைவர் விஜய் வியாழக்கிழமை மீண்டும் கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தவெக-விடம் ஆட்சி அமைக்க போதிய எம்.எல்.ஏ-க்கள் இல்லை என அவர் விளக்கியதாக தெரிகிறது. இந்நிலையில், திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த செய்தி பரவியதை அடுத்து, பொதுமக்களிடமும் அரசியல் வட்டாரத்திலும் கடும் விமர்சனங்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து இந்த தகவலுக்கு திமுக மறுப்பு தெரிவித்து, முற்றுப்புள்ளி வைத்தது.

          விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன், துணை முதல்வர் பதவி கேட்டதாகவும், திருச்சி கிழக்கு தொகுதியை கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு தொகுதியை விடுதலை சிறுத்தைகளுக்கு விட்டுத்தர மறுத்த விஜய், அமைச்சரவையில் இடம் தருவதாக கூறியதை தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதுபோல, ஏற்கனவே 4 இடங்களை வைத்துள்ள பாமக-வும் துணை முதல்வர் பதவியை கேட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடதக்கது. இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், முதல்வர், துணை முதல்வர் பதவியை நான் கேட்டதாக வரும் செய்தியில் உண்மை இல்லை என்றும் நாங்கள் எந்தவித பேரமும் பேசவில்லை என்றும், இது வதந்திகள்தான் என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

          இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு தருவதாகவும், ஆட்சியில் பங்கு கேட்க விரும்பவில்லை என்றும் கூறி இன்று (வெள்ளிக்கிழமை) கடிதங்கள் வாயிலாக ஆதரவு தெரிவித்தன. ஆனால், பெரும்பான்மை வராத நிலையில், இன்று மாலை 2 இடங்களை வைத்துள்ள விசிகவும், அதனை தொடர்ந்து 2 இடங்களை வைத்துள்ள முஸ்லிம் லீக் கட்சியும் தவெக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாக கடிதங்கள் வழங்கியது. இதனால், தவெக ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை உறுதி செய்யப்பட்டது. விஜய்யை ஆதரிக்கும் கட்சிகளில் காங்கிரஸை தவிர பிற அனைத்து கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் நிலையில், இன்று மாலை விஜய் ஆளுநரை சந்தித்து பெரும்பான்மை இருப்பதால் ஆட்சி அமைக்க தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

           இதனை அடுத்து, ஆளுநரின் அழைப்பின் படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் விஜய்தமிழகத்தின் 14-வது முதலமைச்சராக பதவி ஏற்கிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த பதவி ஏற்பு விழாவில், முதல் கட்டமாக விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கட்ராமன், நிர்மல் குமார், அருண் ராஜ், முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்த பாபு உள்ளிட்டோர் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

          தவெக அமைச்சரவையில் இடம் பெறுவோர் யார்? யார்?

     ➤ பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை - விஜய்

     ➤ பொதுப்பணித்துறை - செங்கோட்டையன்

     ➤ நகராட்சி நிர்வாகத்துறை - என்.ஆனந்த்

     ➤ மின்சாரத்துறை - சி.டி.ஆர். நிர்மல்குமார்

     ➤ விளையாட்டு மற்றும் மதுவிலக்குத் துறை - ஆதவ் அர்ஜுனா

     ➤ ஆதி திராவிடர் நலத்துறை - ராஜ்மோகன்

     ➤ சிறுபான்மை நலத்துறை - முஸ்தபா

     ➤ பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை - அருண்ராஜ்

     ➤ பள்ளி கல்வித்துறை - வெங்கட் ரமணன்

          இதனை தொடர்ந்து விஜய்யின் அமைச்சர்கள் பட்டியலில் அதிகளவில் பெண்கள் இடம்பெறவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகின்றது.