தூத்துக்குடியில் அதிமுக சாா்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
a-pamphlet-was-distributed-by-aiadmk-in-thoothukudi
தூத்துக்குடியில் அதிமுக சாா்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான 37 வது வார்டு 42 வது வார்டு பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிா்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன் அறிவுறுத்தலின் படி மண்டல செயலாளரும் கவுன்சிலருமான வக்கீல் மந்திரமூர்த்தி தலைமையில் பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் முன்னிலையில் தேர்தல் வாக்குறுதியை வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கினா்.
நிகழ்ச்சியில் வட்ட செயலாளர்கள் அந்தோணிராஜ் ரமேஷ் நவ்ஷாத் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ராஜேஸ்வரி மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மாடசாமி வட்டப்பிரதி குமார் மாவட்ட தொழில்நுட்ப பிரிவு முகமது அனிஷா அரபி பகுதி மாணவரணி செயலாளர் ரியாஸ் அகமது மற்றும் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
tamilanda