வெற்றி தோல்வியை சமமாகக் கருதி தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் அறிக்கை
வெற்றி தோல்வியை சமமாகக் கருதி தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் அறிக்கை
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் மற்றும் உழைப்பை தந்த திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் ஆகியோருக்கு நன்றி இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தூத்துக்குடி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கும் மற்றும் திமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவருக்கும் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், உதயசூரியனுக்கு வாக்களித்த 62,805 வாக்காளப் பெருமக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில், அரசியல் பொதுவாழ்வில் கொள்கை காக்கும் பயணத்தில் நமது கொள்கை என்றும் தோல்வியடையாது. வெற்றி - தோல்வி எதுவானாலும் சமமாகக் கருதி நமது லட்சியப் பயணத்தை தொடருவோம். மக்களுக்காக தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம். மேலும் இந்த சட்டமன்றத் தேர்தலில் தங்கள் அர்ப்பணிப்பான உழைப்பைத் தந்த தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துக் கொண்டாா்.
tamilanda