தூத்துக்குடி குறிஞ்சிநகாில் புதிய மதுபானக்கடை பணிகள் அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை மீண்டும் திமுக கவுன்சிலர் கீதா முருகேசன் போர்க்கொடி
தூத்துக்குடி குறிஞ்சிநகாில் புதிய மதுபானக்கடை பணிகள் அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை மீண்டும் திமுக கவுன்சிலர் கீதா முருகேசன் போர்க்கொடி
தூத்துக்குடி மீண்டும் சர்ச்சையில் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ திறக்கப்படவுள்ள டாஸ்மார்க் கடை முற்றுகையிட்ட பெண்கள். தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த பெண்கள். சகோதரிகள் பெண்களுக்கு ஒண்ணு என்றால் விடமாட்டேன் என்று கூறும் தமிழக முதல்வர் மீண்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கலாமா பொதுமக்கள் கேள்வி
தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றவுடன் தமிழகத்தில் 717 மதுக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டது. அதன்பின்பு படிப்படியாக மது கடை திறக்கப்பட்டு வருகிறது. மீளவிட்டான் ரோட்டில் மதுக்கடை திறப்பதற்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனா்
இந்நிலையில் அப்பகுதி மக்கள் தொடா் 9வது நாள் போராட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி இங்கு மதுக்கடை திறந்தால் நானே ரோட்டில் இறங்கி போராடுவேன் என்று அறிவித்ததை தொடர்ந்து சப் கலெக்டர் உடனடியாக விரைந்து வந்து மதுக்கடை மூடுவதற்கான உத்தரவை பிறப்பித்தார் இதனையடுத்து அங்கு போராட்டம் போதும் என்று பொதுமக்கள் விலக்கிக் கொண்டனர்.
இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு குறிஞ்சி நகர் பகுதியில் புதியதாக தனியார் மதுபான கடை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அப்பகுதி மாமன்ற உறுப்பினரும் மாநகர திமுக துணைச்செயலாளருமான கீதா முருகேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் புதியதாக திறக்கப்பட உள்ள டாஸ்மார்க் கடை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் தமிழக அரசு இந்த இடத்தில் கடையை திறக்க முயற்சி செய்தால் மாபெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த செல்வி கூறுகையில் பொதுமக்கள் அதிகம் கூடுகிற இடம் குறிப்பாக பெண்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதி இங்கு மருத்துவமனை கோவில் உள்ளது இந்த இடத்தில் மதுபான கடை திறக்க கூடாது ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் இந்த மதுபான கடையை நடத்துவதாக கூறப்படுகிறது தொடர்ந்து முயற்சி செய்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் அப்பகுதியைச் சேர்ந்த செல்வி கூறினார்.இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் கூறுகையில் இந்தப் பகுதியில் இந்த இடத்தில் ஒரு ஹோட்டல் இருந்தது. இந்த இடத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் காலை 11:00 மணி முதல் இரவு 11 மணி வரை தனியார் மதுபான கடை நடத்த அனுமதி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது இந்தப் பகுதியில் ரேஷன் கடை கோவில் பள்ளிக்கூடம் அதுபோல பொதுமக்கள் அதிகமாக நடமாடக்கூடிய பகுதி இங்கு பல்வேறு சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது வழிப்பறி நடக்க வாய்ப்பு உள்ளது இந்த இடத்தில் மது கடை திறக்க கூடாது ஏற்கனவே அரசு மதுபான கடை இதன் அருகிலேயே இருந்தது பல சம்பவங்கள் நடந்துள்ளது நாங்கள் போராடியதால் அந்த கடை மாற்றப்பட்டது இந்த இடத்தில் மீண்டும் மது கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம். இன்று நாங்கள் சிறிய அளவில் போராட்டம் நடத்துகிறோம் தொடர்ந்து மது கடையை திறக்க முயற்சித்தால் மிகப்பெரிய போராட்டம் உண்ணாவிரதம் நடத்தப்படும் இது முழுக்க முழுக்க பொது மக்களாக நாங்கள் நடத்துகிறோம். தமிழக அரசு பெண்களுக்கு நல்ல திட்டங்கள் செய்கிறது அதனை மனதில் கருத்தில் கொண்டு இந்த இடத்தில் மதுபான கடையை தமிழக அரசு திறக்க அனுமதிக்க கூடாது வாபஸ் பெற வேண்டும் தொடரும் பட்சத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் போராட்டம் சாலை மறியல் நடைபெறும் என்று விக்னேஷ் தெரிவித்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாநகர் பகுதியில் மூடப்பட்ட மதுபான கடைகளை வெவ்வேறு பகுதிகளில் தமிழக அரசு தொடர்ந்து மதுபான கடைகளை திறக்க அனுமதி அளித்து வருகிறது இதன் மூலம் பொதுமக்கள் தமிழக அரசு மீது கடும் அதிருப்தில் உள்ளனர் என்பது மட்டும் தெரிய வருகிறது.
tamilanda