தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் பெருமையுடன் நடத்தும் சத்யா கோப்பைக்காண 27 ஆவது அகில இந்திய கைப்பந்து போட்டி தூத்துக்குடியில் ஜூன் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் பெருமையுடன் நடத்தும் சத்யா கோப்பைக்காண 27 ஆவது அகில இந்திய கைப்பந்து போட்டி தூத்துக்குடியில் ஜூன் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. சத்யா கோப்பைக்காண 27 -வது அகில இந்திய கைப்பந்து ஆண், பெண் மின்னொளி போட்டி தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகத்தினரால் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நம்நகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மைதானத்தில் சிறப்பாக நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள். ஆண்கள் பிரிவு டெல்லி இந்தியன் நேவி அணி., பெங்களூர் கர்நாடகா அணி, திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணி, டெல்லி இன்கம் டேக்ஸ் அணி, சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழக அணி, கேரளா கே எஸ் இ பி அணி, பெண்கள் பிரிவுகளில் திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணி, சென்னை ஐ சி எப் அணி , கொல்கத்தா கிழக்கு இந்திய ரயில்வே அணி ,கேரளா எம் ஜி பல்கலைக்கழக அணி, போன்ற அணிகள் மோதுகின்றது. 27வது அகில இந்திய கைப்பந்து போட்டியில் இந்தியாவின் தலைசிறந்த சர்வதேச புகழ்பெற்ற வீரர்கள், வீராங்கனைகள், பங்கேற்று விளையாடுகிறார்கள். அகில இந்திய அளவில் புகழ்பெற்ற அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் தினமும் மாலை ஏழு மணிக்கு ஆரம்பம் ஆகும். நம் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தி நமது மாவட்டத்தில் கைப்பந்து விளையாட்டினை மேலும் சிறப்பாக வளர்த்திடும் உயரிய நோக்கத்தில் இந்த அகில இந்திய கைப்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. சுமார் 5000 பேர் அமர்ந்து தினமும் விளையாட்டுப் போட்டிகளை ரசிக்கத்தக்க விதமாக சிறப்பான கேலரி, சேர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனித்தனியாக விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்காக தங்கும் இடங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சமமான பரிசுத்தொகையாக முதல் பரிசு ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம், இரண்டாம் பரிசு ஒரு லட்சம் மற்றும் அரை இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் இரண்டு அணிகளுக்கு தலா ₹50,000 வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சத்யா கோப்பை வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்வின் முதல் நாள் துவக்க விழாவில் தூத்துக்குடி வ உ சி துறைமுக துணை தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன், தலைமை தாங்குகிறார். சத்யா ஏஜென்சிஸ் லிமிடெட் ஜேக்சன் சாமுவேல் மற்றும் தமிழக கைப்பந்து கழக வாழ்நாள் தலைவர் அர்ஜுன் துரை ஆகியோர் முன்னிலையில் போட்டிகளை துவக்கி வைக்கிறார்கள். மேலும் இறுதி நாள் விழாவில் தூத்துக்குடி வ உ சி துறைமுக தலைவர் சுசந்தா குமார் புரோகித் தலைமையில் சத்யா ஏஜென்சிஸ் லிமிடெட் ஜான் ரோஷன் மற்றும் தமிழக கைப்பந்து கழக பொதுச்செயலாளர் மார்ட்டின் சுதாகர், முன்னிலையில் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஏ .ஸ்ரீநாத் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சத்யா ஏஜென்சிஸ் லிமிடெட் நிறுவனமும் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகத் தலைவர் டி.ஜான் வசீகரன் செயலாளர். எஸ். ரமேஷ் குமார், பொருளாளர் எஸ்.செயின்ட் ரவி ராஜன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
tamilanda