தூத்துக்குடியில் பாஜக சார்பில் ‘சேவா ஜோதி’ பேரணி,தேசியக்கொடி, பாஜக கொடிகளுடன் பங்கேற்ற நிர்வாகிகள்

தூத்துக்குடியில் பாஜக சார்பில் ‘சேவா ஜோதி’ பேரணி,தேசியக்கொடி, பாஜக கொடிகளுடன் பங்கேற்ற நிர்வாகிகள்

தூத்துக்குடியில் பாஜக சார்பில் ‘சேவா ஜோதி’ பேரணி,தேசியக்கொடி, பாஜக கொடிகளுடன் பங்கேற்ற நிர்வாகிகள்

தூத்துக்குடி:   :பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையை நினைவுகூரும் வகையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் ‘சேவா ஜோதி’ பேரணி தூத்துக்குடியில் நடைபெற்றது.

 இளைஞர் அணி மாவட்ட தலைவர் சக்திவேல் தீபத்தை ஏந்தியபடி பேரணி நடைபெற்றது.

தேசியக்கொடிகள் மற்றும் பாஜக கொடிகளும் எடுத்துச் செல்லப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடியின் பொதுவாழ்க்கைப் பயணத்தை விளக்கும் பதாகைகள் பேரணியில் இடம்பெற்றன.

பேரணியின் நோக்கம் : பிரதமர் நரேந்திர மோடியின் பொதுவாழ்க்கைப் பயணத்தை நினைவுகூருவதுடன், மக்கள் நலன் மற்றும் சமூக சேவை தொடர்பான கருத்துகளை எடுத்துரைக்கும் நோக்கத்துடன் பேரணி நடத்தப்பட்டதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

2047 இலக்கை முன்வைத்து

இந்தியாவின் சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047-க்குள் நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளில் பொதுமக்கள் பங்களிக்க வேண்டும் என்ற கருத்தும் பேரணியில் வலியுறுத்தப்பட்டது

பேரணியில் பாஜக தேசிய செயலாளர் மா. வெங்கடேசன், மீனவர் அணி மாநிலத் தலைவர் சீமா பாலு, தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர்கள், ஏ எம் ராஜேஷ் ஆறுமுகம் செல்வராஜ் மாவட்ட துணைத் தலைவர்கள், சிவராமன் இசக்கிமுத்து காளிராஜா மாசானம் சண்முகசுந்தரம் வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வீரா மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.