பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்: அரசாணை ரத்து செய்ய முடிவு

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்: அரசாணை ரத்து செய்ய முடிவு

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்: அரசாணை ரத்து செய்ய முடிவு

 பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.