எடப்பாடியார் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரூபாய் 10 ஆயிரம் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வழங்கப்படும் பிரிட்ஜ் விலை இல்லாமல் வழங்கப்படும் மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும்

as-soon-as-edappadiyar-assumes-office-a-sum-of-indian-rupee10000-will-be-provided-to-every-ration-card-holder-refrigerators-will-be-distributed-free-of-cost-and-a-monthly-allowance-of-indian-rupee2000-will-be-provided

எடப்பாடியார் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரூபாய் 10 ஆயிரம் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வழங்கப்படும் பிரிட்ஜ் விலை இல்லாமல் வழங்கப்படும் மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நாம் தமிழர் கட்சி தமிழக வெற்றி கழகம் உட்பட பல்வேறு கட்சிகள் போட்டி போட்டு தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்கள் இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சரும் வர்த்தக அணி மாநில செயலாளருமான செல்ல பாண்டியன் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் இன்று போல் பேட்டை, குறிஞ்சி நகர், தனசேகரன் நகர்,காசிராஜன் நகர்,செல்வ விநாயகபுரம், நந்தகோபாலபுரம்,டிஎம்சி காலனி அழகேசபுரம்,நடராஜபுரம்,சுந்தர் ராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் திமுக அரசியல் மீதான பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தார் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதியில் எந்த வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை மக்களின் அடிப்படை தேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன அதிமுக ஆட்சி காலத்தில் இருந்த பொற்காலத் திட்டங்கள் மீண்டும் கிடைக்க எனக்கு வாக்களியுங்கள் மேலும் எடப்பாடியார் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரூபாய் 10 ஆயிரம் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வழங்கப்படும் பிரிட்ஜ் விலை இல்லாமல் வழங்கப்படும் மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் உட்பட பல்வேறு அதிமுக அரசின் தேர்தல் அறிக்கைகளை மக்களிடம் எடுத்துரைத்தார் இந்த பரப்புரையில் தேர்தல் பொறுப்பாளர்கள் சின்னத்துரை ஆறுமுக நயினார் போன்றோர் முன்னிலை வகித்தனர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் மகளிர் போன்றோர் திரளானோர் கலந்து கொண்டு வீதி வழியாக நடந்து சென்று வாக்குகளை சேகரித்தனர்