தாயை இழந்த சோகம் மறையும் முன் தந்தையையும் இழந்து அனாதையான இரு மகள்கள்

தாயை இழந்த சோகம் மறையும் முன் தந்தையையும் இழந்து அனாதையான இரு மகள்கள்

 தாயை இழந்த சோகம் மறையும் முன் தந்தையையும் இழந்து அனாதையான இரு மகள்கள்

> ஓட்டப்பிடாரம், நவ.18: நெல்லை அருகே, கே.கைலாசபுரம் கிராமத்தில் நடந்த ஒரு சிறிய தகராறு, ஒரு குடும்பத்தையே இருளில் தள்ளிவிட்டது.

> உயிரிழந்தவர், புளியம்பட்டி அடுத்த கே.கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி நடேஷ்குமார் (45).

> நேற்று இரவு, கே.கைலாசபுரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில், கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகாராஜன் பொருட்கள் வாங்க வந்துள்ளார். ஜி.பே. மூலம் பணம் செலுத்தியதாக அவர் கூற, கடைக்காரர் பணம் வரவில்லை எனக் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

> அங்கு வந்த நடேஷ்குமார், கடைக்காரருக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் பகையாக மாறி, வீட்டிற்குச் சென்ற மகாராஜன், கத்தியுடன் மீண்டும் கடைக்கு வந்து நடேஷ்குமாரை குத்தியதாகக் கூறப்படுகிறது.

> மூத்த மகள் காவியா, B.A முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகள் ரம்யா, 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தக் குழந்தைகளின் தாயார், கடந்த 2025-ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் உயிரிழந்தார். தாயை இழந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல், தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்த இந்தக் குழந்தைகள், தற்போது தந்தையையும் இழந்து அனாதையாக நிற்கின்றனர்.