தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பிலிருந்து செல்வ பெருந்தகை பதவி விலக வேண்டும் என்று அறிக்கை விடுத்த வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள் சாமிக்கு முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ். முரளிதரன் கடும் கண்டனம்*

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பிலிருந்து செல்வ பெருந்தகை பதவி விலக வேண்டும் என்று அறிக்கை விடுத்த வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள் சாமிக்கு முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ். முரளிதரன் கடும் கண்டனம்*

*தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பிலிருந்து செல்வ பெருந்தகை பதவி விலக வேண்டும் என்று அறிக்கை விடுத்த வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள் சாமிக்கு முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ். முரளிதரன் கடும் கண்டனம்*

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஊடகங்கள், பத்திரிகைகள் மூலமாக அறிக்கையை வெளியிட்டு இருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. காங்கிரஸ் கட்சியில் எந்தவித உழைப்பும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பொறுப்பை பெற்று பொதுவெளியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துவது காங்கிரஸ் கட்சிக்கு செய்யும் பெரிய துரோகம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பான ஒன்று. நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப் பெருந்தகை அவர்கள் கடுமையான உழைப்பின் காரணமாகத்தான் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இந்த அளவிற்கு காலூன்றி நிற்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.இந்த நேரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டுமே தவிர அறிக்கை மூலமாக தலைவர் பதவி விலக வேண்டும் என்று போர்க்கொடி தூக்குவது ஏற்கத்தக்கது அல்ல. காங்கிரஸ் கட்சிக்குள்ளே இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு குழி தோண்டும் இவர்களை அகில இந்திய தலைமையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையும் உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் இல்லை என்றால் இது தமிழகம் முழுவதும் பரவி காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும். எனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது நிறைவேறுமா என்று ஆவலுடன் உள்ளார்கள். காங்கிரஸ் கட்சிக்கு தேவை உடனடியாக இவர்களை போன்றவர்களை பதவி நீக்கம் செய்வது ஒன்றுதான் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

இவ்வாறு முன்னாள் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்