தூத்துக்குடியில் வரும் 28ல் காங்கிரஸ் மறு சீரமைப்பு ஓருங்கிணைப்பாளா் மாநாடு மாநில தலைவர் மாணிக்கம் தாகூா் எம்.பி அமைச்சா்கள் பங்கேற்பு
தூத்துக்குடியில் வரும் 28ல் காங்கிரஸ் மறு சீரமைப்பு ஓருங்கிணைப்பாளா் மாநாடு மாநில தலைவர் மாணிக்கம் தாகூா் எம்.பி அமைச்சா்கள் பங்கேற்பு
தூத்துக்குடி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.மாணிக்கம் தாகூர், மாநில மறுசீரமைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ் குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மறுசீரமைப்பு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சி மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் தனியாா் ஹாலில் நடைபெற்றது.
இதில் தென்மண்டல காங்கிரஸ் மறுசீரமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவராமன், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாநகர் மாவட்டத் தலைவர்கள் சகாயராஜ், பெருமாள் சாமி, ராஜாராம் லாரன்ஸ், ராபின்சன் தெற்கு மாவட்டத் துணைத் தலைவர்கள் சங்கர், பாண்டியன், நாகர்கோவில் மாநகர் சிவபிரபு மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் முத்தழகன், பூவை ஜேம்ஸ், பஞ்சாட்சரம் முன்னாள் எம்.எல்.ஏ டேனியல் ராஜ், காங்கிரஸ் என்ஜிஓ மாநில ஒருங்கிணைப்பாளர் புல்லட் ராஜதுரை தூத்துக்குடி மாநகர் தெற்கு வடக்கு, ராமநாதபுரம் மாவட்டம் கன்னியாகுமரி கிழக்கு மேற்கு நாகர்கோவில் மாநகர் உள்ளிட்ட மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைபெற இருக்கிற மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மாநாட்டு விழாவை சிறப்பாக நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மாநகா் மாவட்ட தலைவர் சகாயராஜ் நன்றி கூறினாா்.
tamilanda