தூத்துக்குடி துறைமுக சபை நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி துறைமுக சபை நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி துறைமுக சபை நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. வ வ உ சி துறைமுகத்தில் பணியில் இருக்கும் போது உயிர் இழந்த ஊழியர்களின் வாரிசுகளும் மற்றும் மருத்துவத்துறையில் ஓய்வு பெற்ற வாரிசுகள் ஆக மொத்தம் 140 குடும்பங்கள் உள்ளன கடந்த மூன்று ஆண்டுகளில் துறைமுக சபையில் ஒப்பந்த அடிப்படையில் 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளார்கள் அதில் ஒரு பத்து நபர்களுக்கு கூட வாரிசுதாரர் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை அவர்களுக்கு துறைமுகத்தில் வேலை வாய்ப்பு வழங்காமல் புறக்கணிப்பதை கண்டித்தும் தூத்துக்குடி துறைமுகத்தில் பணியில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை கொடுக்க மறுக்கப்படுகிறது. ஆனால் அதிகாரிகளின் சாதிக்காரர்களும் சொந்தக்காரர்களும் வேலை கொடுப்பதை கண்டித்தும் துறைமுகத்தில் வாரிசுகளுக்கு வேலை வழங்காமல் 60 வயது முடிந்த இளைஞர்களுக்கு மீண்டும் துறைமுகத்தில் வேலை வாய்ப்பா துறைமுகத்தில் எத்தனையோ கோடி பல கோணங்களில் செலவு செய்யப்படுவதை கண்டித்தும் துறைமுக நலனுக்காக தன்னுயிர் நீத்த தியாகிகளின் வாரிசுகளுக்கு நிரந்தர வேலை அல்லது காலம் வரை ஊதியம் நிர்ணயம் செய்து குறைந்தபட்சம் ரூபாய் 40 லட்சம் வழங்க வேண்டும் அல்லது மேற்கண்ட வாரிசுகளுக்கு செட்டில்மெண்ட் ரூபாய் 20 லட்சம் வழங்கப்பட வேண்டும். துறைமுகத்தில் பத்தாயிரம் கோடி ஊழல் மத்திய சிபிஐ மற்றும் துறைமுகத்தில் உள்ள விஜிலென்ஸ் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் பிற துறைமுகங்களில் வாரிசுதாரர்களுக்கு ஒன் டைம் செட்டில்மெண்ட் வழங்குவது போல் வ உ சி துறைமுகத்தில் வழங்காததை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய எஸ்சி எஸ்டி நிர்வாகத் தலைவர் ஞானசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார். சட்ட ஆலோசகர் சார்லஸ் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்விற்கு வ உ சி துறைமுக பணியாளர் மற்றும் ஒப்பந்த பணியாளர் நல சங்கம் தலைவர் பெருமாள் துறைமுகம் மு கருணாநிதி நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாரி செல்வம் முன்னிலை வகித்து பேசினார். இதில் துணைச்செயலாளர் அலெக்ஸின், டி என் இ பி எஸ் சி எஸ் டி தலைவர் கார்மேகம், பாபு செயல் தலைவர், செயல் செயலாளர் செந்தில் சுரேஷ், எட்டையாபுரம் கோயில் பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
tamilanda