தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அசத்தல் - நிகர லாபம் 42% உயர்ந்து ₹451 கோடி!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அசத்தல் - நிகர லாபம் 42% உயர்ந்து ₹451 கோடி!
தூத்துக்குடி, அக்.27:
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 105 ஆண்டுகள் பழமையான தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB), 2026-27 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (Q2 FY27) சாதனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
தூத்துக்குடி V.E. Road-ல் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று (26.10.2026) நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில், செப்டம்பர் 30, 2026 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான நிதி முடிவுகளை MD & CEO சேல் எஸ். நாயர் வெளியிட்டார்.
வங்கியின் சாதனை முக்கிய அம்சங்கள்:மொத்த வணிகம்:* 27.25% வளர்ச்சி - ₹1,30,237 கோடி (பட்டியலிடப்பட்ட வங்கிகளில் மிக உயர்வு)
- *நிகர லாபம்:* ₹318 கோடியில் இருந்து ₹451 கோடியாக 42.09% அசுர வளர்ச்சி
- *மொத்த வைப்பு:* ₹69,546 கோடி (25.49% ↑)
- *மொத்த கடன்:* ₹60,691 கோடி (29.32% ↑)
- *வாராக்கடன் (GNPA):* 0.61% - கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைவு
- *நிகர வாராக்கடன் (NNPA):* 0.14% ஆக குறைவு
- *CASA:* ₹17,629 கோடி
- *CRAR:* 32.39% (மிக வலுவான மூலதன நிலை)
- *NII வருமானம்:* ₹807 கோடி (35.17% ↑)
தற்போது வங்கி 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 631 கிளைகள், 13 மண்டல அலுவலகங்களுடன் 53 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது. இந்த காலாண்டில் மட்டும் 3 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.
"எங்கள் அடிப்படை வங்கிச் சேவைகளின் வலிமையை இந்த முடிவுகள் பிரதிபலிக்கிறது. MSME மற்றும் வர்த்தகர்களுக்கு ஆதரவு அளிப்பதில் எங்கள் கவனம் இருக்கும்" - MD & CEO சேல் எஸ். நாயர்
tamilanda